எசேக்கியேல் 25
Tamil Bible (BSI 1957) • 17 verses
1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
2மனுபுத்திரனே, நீ அம்மோன் புத்திரருக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
Relatedஎரேமியா 49:1-6 · எசேக்கியேல் 6:2 · ஆமோஸ் 1:13-15 · எசேக்கியேல் 20:46 · எசேக்கியேல் 21:28-32 · எசேக்கியேல் 35:2
3அம்மோன் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்: என் பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோதும், இஸ்ரவேல்தேசம் பாழாக்கப்படுகிறபோதும், யூதா வம்சத்தார் சிறையிருப்பிலே போகிறபோதும், நீ அவர்களுக்கு விரோதமாக ஆ ஆ, என்று நிந்தித்தபடியினால்,
Relatedஎசேக்கியேல் 36:2 · சங்கீதம் 70:2-3 · நீதிமொழிகள் 17:5 · மீகா 7:8 · எசேக்கியேல் 25:6 · நீதிமொழிகள் 24:17-18
4இதோ, நான் உன்னைக் கிழக்குத்தேசத்தாருக்குச் சுதந்தரமாக ஒப்புக்கொடுப்பேன், அவர்கள் உன்னில் தங்கள் அரண்களைக் கட்டி, உன்னில் தங்கள் வாசஸ்தலங்களை உண்டுபண்ணுவார்கள்; அவர்கள் உன் கனிகளைப்புசித்து, உன் பாலைக் குடிப்பார்கள்.
Relatedநியாயாதிபதிகள் 6:33 · உபாகமம் 28:33 · ஏசாயா 1:7 · I இராஜாக்கள் 4:30 · உபாகமம் 28:51 · நியாயாதிபதிகள் 8:10
5நான் ரப்பாவை ஒட்டகங்களின் கொட்டகையும், அம்மோன் புத்திரரின் தேசத்தை ஆட்டுக்கிடையுமாக்குவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள்.
Relatedஎசேக்கியேல் 21:20 · II சாமுவேல் 12:26 · ஏசாயா 17:2 · எசேக்கியேல் 25:8 · எசேக்கியேல் 24:24 · எசேக்கியேல் 26:6
6கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல்தேசத்துக்கு விரோதமாக நீ கை கொட்டி, உன் காலால் தட்டி, வர்மம் வைத்து, ஆகடியம் பண்ணினபடியினால்,
Relatedஒபதியா 1:12 · செப்பனியா 2:8 · செப்பனியா 2:10 · எசேக்கியேல் 6:11 · எசேக்கியேல் 25:15 · நாகூம் 3:19
7இதோ, உனக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, உன்னை ஜாதிகளுக்குக் கொள்ளையாக ஒப்புக்கொடுத்து, உன்னை ஜனங்களுக்குள்ளே வேரற்றுப்போகப்பண்ணி, உன்னை தேசங்களுக்குள்ளே அழித்து, உன்னை நிர்மூலமாக்குவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.
Relatedசெப்பனியா 1:4 · எசேக்கியேல் 6:14 · எசேக்கியேல் 25:13 · எசேக்கியேல் 25:16 · எரேமியா 49:2 · ஆமோஸ் 1:14-15
8கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ, யூதா வம்சத்தார் எல்லா ஜாதிகளுக்கும் ஒத்தவர்களென்று மோவாபும் சேயீரும் சொல்லுகிறபடியினால்,
Relatedஎரேமியா 25:21 · எரேமியா 48:1-47 · ஏசாயா 15:1-9 · சங்கீதம் 83:4-8 · எண்ணாகமம் 24:17 · ஏசாயா 10:9-11
9இதோ, அம்மோன் புத்திரரின் பேர் ஜாதிகளுக்குள் இராதபடிக்கு நான் அம்மோன் புத்திரரின் தேசத்தைக் கிழக்குத் தேசத்தாருக்குத் திறந்துவைத்து, சுதந்தரமாய் ஒப்புக்கொடுக்கிறவண்ணமாக,
Relatedஎரேமியா 48:23 · யோசுவா 13:17 · எண்ணாகமம் 32:37-38 · யோசுவா 13:19-20 · யோசுவா 12:3 · எண்ணாகமம் 32:3
10நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடையாந்தர ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும், பாகால்மெயோனையும், கீரியாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து,
11மோவாபிலே நியாயங்களைச் செய்வேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
Relatedஎசேக்கியேல் 16:41 · யூதா 1:15 · சங்கீதம் 9:16 · எசேக்கியேல் 35:15 · எசேக்கியேல் 25:5 · எசேக்கியேல் 5:8
12கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: ஏதோம் யூதா வம்சத்தாரிடத்தில் குரோதந்தீர்த்து, பழிவாங்கி, பெரிய குற்றஞ்செய்தபடியினால்,
Relatedஎரேமியா 49:7-22 · சங்கீதம் 137:7 · எசேக்கியேல் 25:8 · ஒபதியா 1:10-16 · ஆமோஸ் 1:11-12 · II நாளாகமம் 28:17-18
13கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் ஏதோம்தேசத்துக்கு விரோதமாக என் கையை நீட்டி அதில் மனுஷரையும் மிருகங்களையும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, அதைத் தேமான் துவக்கித் தேதான்மட்டும் வனாந்தரமாக்குவேன்; பட்டயத்தால் விழுவார்கள்.
Relatedமல்கியா 1:3-4 · எசேக்கியேல் 29:8 · எரேமியா 25:23 · எரேமியா 49:7-8 · ஏசாயா 63:1-6 · எசேக்கியேல் 25:7
14நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தின் கையினால் ஏதோமினிடத்தில் பழிவாங்குவேன்; அவர்கள் என் கோபத்தின்படியும் என் உக்கிரத்தின்படியும் ஏதோமுக்குச் செய்வார்கள்; அப்பொழுது நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Relatedஆதியாகமம் 27:29 · ஏசாயா 11:14 · சங்கீதம் 58:10-11 · ஏசாயா 63:1-6 · உபாகமம் 32:35-36 · எரேமியா 49:2
15கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: பெலிஸ்தியர் குரோதக்காரராயிருந்து, பழம்பகையால் கேடுசெய்யவேண்டுமென்று, வர்மம் வைத்துப் பழிவாங்கினபடியினால்,
Relatedஎசேக்கியேல் 25:6 · ஏசாயா 14:29-31 · II நாளாகமம் 28:18 · எரேமியா 25:20 · சகரியா 9:5-8 · எசேக்கியேல் 25:12
16இதோ, நான் பெலிஸ்தியருக்கு விரோதமாக என் கையை நீட்டி, கிரேத்தியரைச் சங்கரித்து, சமுத்திரக்கரையில் மீதியானவர்களை அழித்து,
RelatedI சாமுவேல் 30:14 · செப்பனியா 2:4-15 · எசேக்கியேல் 25:13 · எரேமியா 47:1-7 · எசேக்கியேல் 25:7 · II சாமுவேல் 15:18
17உக்கிரமான தண்டனைகளினால் அவர்களில் கொடிதாய்ப் பழிவாங்குவேன்; நான் அவர்களில் பழிவாங்கும்போது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
📖 எசேக்கியேல்All 48 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS