நியாயாதிபதிகள் 3
Tamil Bible (BSI 1957) • 31 verses
1கானான் தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும்,
Relatedநியாயாதிபதிகள் 2:21-22 · நீதிமொழிகள் 17:3 · உபாகமம் 7:22 · I பேதுரு 4:12 · உபாகமம் 8:16 · யோபு 23:10
2இஸ்ரவேல் புத்திரரின் சந்ததியாரும் அதற்குமுன் யுத்தஞ்செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும் கர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள் யாரென்றால்:
RelatedII தீமோத்தேயு 2:3 · மத்தேயு 10:34-39 · ஆதியாகமம் 2:17 · ஆதியாகமம் 3:7 · ஆதியாகமம் 3:5 · I தீமோத்தேயு 6:12
3பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும், சகல கானானியரும், சீதோனியரும், பாகால்எர்மோன் துவக்கி ஆமாத்திற்குள் பிரவேசிக்கும்வரைக்கும் லீபனோனின் மலைகளிலே குடியிருக்கிற ஏவியருமே.
Relatedயோசுவா 13:3 · யோசுவா 13:5 · நியாயாதிபதிகள் 18:7 · நியாயாதிபதிகள் 4:2 · யோசுவா 19:28 · I சாமுவேல் 4:1-2
4கர்த்தர் மோசேயைக்கொண்டு தங்கள் பிதாக்களுக்கு விதித்த கற்பனைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலரை அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.
Relatedநியாயாதிபதிகள் 2:22 · நியாயாதிபதிகள் 3:1 · I கொரிந்தியர் 11:19 · யாத்திராகமம் 15:25 · உபாகமம் 8:2 · உபாகமம் 33:8
5இப்படி இஸ்ரவேல் புத்திரர், கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியராகிய இவர்கள் நடுவே குடியிருந்து,
Relatedசங்கீதம் 106:34-38 · யாத்திராகமம் 3:17 · ஆதியாகமம் 10:15-18 · யாத்திராகமம் 3:8 · யோசுவா 9:1 · ஆதியாகமம் 15:19-21
6அவர்களுடைய குமாரத்திகளை விவாகம்பண்ணி, தங்களுடைய குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடுத்து, அவர்கள் தேவர்களைச் சேவித்தார்கள்.
Relatedயாத்திராகமம் 34:16 · உபாகமம் 7:3-4 · I இராஜாக்கள் 11:1-5 · எஸ்றா 9:11-12 · நெகேமியா 13:23-27 · எசேக்கியேல் 16:3
7இப்படி இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் சேவிக்கிறபோது,
Relatedயாத்திராகமம் 34:13 · உபாகமம் 4:9 · II இராஜாக்கள் 23:6 · உபாகமம் 16:21 · II நாளாகமம் 15:16 · II நாளாகமம் 33:3
8கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள்.
Relatedநியாயாதிபதிகள் 2:14 · நியாயாதிபதிகள் 4:9 · சங்கீதம் 85:3 · ஆபகூக் 3:7 · நியாயாதிபதிகள் 2:20 · ரோமர் 7:14
9இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு இரட்சகனை அவர்களுக்கு எழும்பப்பண்ணினார்.
Relatedநியாயாதிபதிகள் 3:15 · நியாயாதிபதிகள் 1:13 · சங்கீதம் 22:5 · நியாயாதிபதிகள் 6:7 · நியாயாதிபதிகள் 10:10 · சங்கீதம் 107:13-19
10அவன்மேல் கர்த்தருடைய ஆவி வந்திருந்ததினால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்பண்ணப் புறப்பட்டான்; கர்த்தர் மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார்; ஆகையால் அவன் கை கூசான்ரிஷதாயீமின்மேல் பலங்கொண்டது.
Relatedநியாயாதிபதிகள் 14:6 · நியாயாதிபதிகள் 11:29 · I சாமுவேல் 11:6 · நியாயாதிபதிகள் 14:19 · நியாயாதிபதிகள் 13:25 · II நாளாகமம் 15:1
11தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது. கேனாசின் குமாரனாகிய ஒத்னியேல் மரணமடைந்தான்.
Relatedநியாயாதிபதிகள் 5:31 · யோசுவா 11:23 · நியாயாதிபதிகள் 8:28 · நியாயாதிபதிகள் 3:30 · எஸ்தர் 9:22 · யோசுவா 15:17
12இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்.
RelatedI சாமுவேல் 12:9 · நியாயாதிபதிகள் 2:19 · யோவான் 19:11 · நியாயாதிபதிகள் 2:11 · தானியேல் 4:22 · ஏசாயா 45:1-4
13அவன் அம்மோன் புத்திரரையும் அமலேக்கியரையும் கூட்டிக்கொண்டு வந்து, இஸ்ரவேலை முறிய அடித்தான்; பேரீச்சமரங்களின் பட்டணத்தையும் பிடித்தான்.
14இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவைப் பதினெட்டு வருஷம் சேவித்தார்கள்.
15இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பப்பண்ணினார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாயிருந்தான்; அவன் கையிலே இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள்.
Relatedநியாயாதிபதிகள் 3:9 · சங்கீதம் 78:34 · நியாயாதிபதிகள் 20:16 · எரேமியா 33:3 · ஏசாயா 36:16 · I சாமுவேல் 10:27
16ஏகூத், இருபுறமும் கருக்கும் ஒரு முழ நீளமுமான ஒரு கத்தியை உண்டுபண்ணி, அதைத் தன் வஸ்திரத்துக்குள்ளே தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டிக்கொண்டு,
Relatedசங்கீதம் 45:3 · வெளிப்படுத்தின விசேஷம் 2:12 · எபிரெயர் 4:12 · வெளிப்படுத்தின விசேஷம் 1:16 · சங்கீதம் 149:6 · நியாயாதிபதிகள் 3:21
17காணிக்கையை மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குச் செலுத்தினான்; எக்லோன் மிகவும் ஸ்தூலித்த மனுஷனாயிருந்தான்.
Relatedயோபு 15:27 · எசேக்கியேல் 34:20 · சங்கீதம் 73:19 · நியாயாதிபதிகள் 3:29 · எரேமியா 50:11 · எரேமியா 5:28
18அவன் காணிக்கையைச் செலுத்தித் தீர்ந்தபின்பு, காணிக்கையைச் சுமந்து வந்த ஜனங்களை அனுப்பிவிட்டான்.
19அவனோ கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து: ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு அவன்: பொறு என்றான்; அப்பொழுது அவனிடத்தில் நின்ற யாவரும் அவனை விட்டு வெளியே போய்விட்டார்கள்.
Relatedயோசுவா 4:20 · II இராஜாக்கள் 9:5-6 · நியாயாதிபதிகள் 3:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:18-19 · ஆதியாகமம் 45:1
20ஏகூத் அவன் கிட்டே போனான்; அவனோ தனக்குத் தனிப்புறம் இருந்த குளிர்ச்சியான அறைவீட்டில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடத்திலே சொல்லவேண்டிய தேவவாக்கு எனக்கு உண்டு என்றான்; அவன் தன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்தான்.
Relatedஎரேமியா 10:7 · ஆமோஸ் 3:15 · சங்கீதம் 29:1 · II சாமுவேல் 24:12 · மீகா 6:9 · II சாமுவேல் 12:1-15
21உடனே ஏகூத் தன் இடதுகையை நீட்டி, தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டியிருந்த கத்தியை உருவி, அதை அவன் வயிற்றிற்குள் பாய்ச்சினான்.
22அலகோடேகூடக் கைப்பிடியும் உள்ளே புகுந்தது; அவனுடைய வயிற்றிற்குள் போன கத்தியை இவன் இழுக்கக்கூடாதபடிக்கு, நிணம் அலகைச் சுற்றிக் கொண்டடைத்தது; அது பின்புறத்திலே புறப்பட்டது.
23ஏகூத் புறப்பட்டு, அறைவீட்டின் கதவைச் சாத்திப் பூட்டிப்போட்டு, கொலுக்கூடத்தின் வழியாய்ப் போய்விட்டான்.
24அவன் போனபின்பு ஊழியக்காரர் வந்து பார்த்தார்கள்; இதோ, அறைவீட்டின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான அறையிலே மலஜலாதிக்கிருக்கிறாராக்கும் என்றார்கள்.
RelatedI சாமுவேல் 24:3
25அவர்கள் சலித்துப்போகுமட்டும் காத்திருந்தார்கள்; அவன் அறைவீட்டின் கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்கள் ஆண்டவன் தரையிலே செத்துக்கிடந்தான்.
26அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தபோது, ஏகூத் ஓடிப்போய், சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, சேயிராத்தைச் சேர்ந்து தப்பினான்.
27அங்கே வந்தபோது எப்பிராயீம் மலையில் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனோடேகூட மலையிலிருந்து இறங்கினார்கள்; அவன் அவர்களுக்கு முன்பாக நடந்து:
Relatedநியாயாதிபதிகள் 6:34 · I சாமுவேல் 13:3 · II இராஜாக்கள் 9:13 · யோசுவா 17:18 · நியாயாதிபதிகள் 17:1 · நியாயாதிபதிகள் 5:14
28என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்; கர்த்தர் உங்கள் பகைஞராகிய மோவாபியரை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றான். அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துபோய், மோவாபுக்கு எதிரான யோர்தான் துறைகளைப் பிடித்து, ஒருவனையும் கடந்துபோகவொட்டாமல்,
Relatedநியாயாதிபதிகள் 12:5 · யோசுவா 2:7 · நியாயாதிபதிகள் 7:15 · I சாமுவேல் 17:47 · நியாயாதிபதிகள் 7:9 · நியாயாதிபதிகள் 7:24
29அக்காலத்திலே மோவாபியரில் ஏறக்குறையப் பதினாயிரம் பேரை வெட்டினார்கள்; அவர்களெல்லாரும் புஷ்டியுள்ளவர்களும் பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; அவர்களில் ஒருவனும் தப்பவில்லை.
30இப்படியே அந்நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் எண்பது வருஷம் அமைதலாயிருந்தது.
31அவனுக்குப்பிற்பாடு ஆனாத்தின் குமாரன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தரில் அறுநூறு பேரை ஒரு தாற்றுக்கோலால் முறிய அடித்தான்; அவனும் இஸ்ரவேலை இரட்சித்தான்.
📖 நியாயாதிபதிகள்All 21 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS