சகரியா 6
Tamil Bible (BSI 1957) • 15 verses
1நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து, இதோ, இரண்டு பர்வதங்களின் நடுவாகப் புறப்பட்டு வருகிற நாலு இரதங்களைக் கண்டேன்; அந்தப் பர்வதங்கள் வெண்கலப் பர்வதங்களாயிருந்தன.
Relatedஎபேசியர் 1:11 · சகரியா 1:18-19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:28 · தானியேல் 8:22 · சகரியா 6:5 · தானியேல் 4:35
2முதலாம் இரதத்தில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக் குதிரைகளும்,
Relatedசகரியா 1:8 · வெளிப்படுத்தின விசேஷம் 6:2-6 · வெளிப்படுத்தின விசேஷம் 12:3 · சகரியா 6:6 · வெளிப்படுத்தின விசேஷம் 17:3
3மூன்றாம் இரதத்தில் வெள்ளைக்குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக்குதிரைகளும் பூட்டியிருந்தன.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 6:2 · வெளிப்படுத்தின விசேஷம் 6:8 · சகரியா 1:8 · வெளிப்படுத்தின விசேஷம் 20:11 · தானியேல் 2:33 · தானியேல் 2:40-41
4நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
5அந்தத் தூதன் எனக்குப் பிரதியுத்தரமாக: இவைகள் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நாலு ஆவிகள் என்றார்.
Relatedஎசேக்கியேல் 10:9-19 · எபிரெயர் 1:7 · எசேக்கியேல் 37:9 · எபிரெயர் 1:14 · II நாளாகமம் 18:18-19 · சங்கீதம் 104:3-4
6ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னாலே புறப்பட்டுப்போயின; புள்ளிபுள்ளியான குதிரைகள் தென்தேசத்துக்குப் புறப்பட்டுப்போயின.
Relatedஎசேக்கியேல் 1:4 · எரேமியா 4:6 · எரேமியா 51:48 · எரேமியா 1:14-15 · எரேமியா 6:1 · தானியேல் 11:40
7சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரியும்படி கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன.
8பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார்.
Relatedஎசேக்கியேல் 5:13 · எரேமியா 51:48-49 · சகரியா 1:15 · எசேக்கியேல் 24:13 · நியாயாதிபதிகள் 8:3 · ஏசாயா 18:3-4
9பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
10சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து,
Relatedஎஸ்றா 7:14-16 · எஸ்றா 8:26-30 · ரோமர் 15:25-26 · ஏசாயா 66:20 · எரேமியா 28:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:17
11அங்கே அவர்கள் கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து, யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய சிரசிலே வைத்து,
Relatedசங்கீதம் 21:3 · சகரியா 3:1 · உன்னதப்பாட்டு 3:11 · ஆகாய் 1:1 · சகரியா 3:5 · வெளிப்படுத்தின விசேஷம் 19:12
12அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்.
13அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.
14இந்தக் கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் குமாரனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக.
Relatedயாத்திராகமம் 12:14 · மாற்கு 14:9 · மத்தேயு 26:13 · யோசுவா 4:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:4 · சகரியா 6:10
15தூரத்திலுள்ளவர்கள் வந்து கர்த்தருடைய ஆலயத்தைக் கூட இருந்து கட்டுவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிந்துகொள்வீர்கள்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்டு நடந்தீர்களானால் இது நிறைவேறும் என்று சொல் என்றார்.
📖 சகரியாAll 14 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS