பாடல் #8183
உயிரோடு உயிரானீரே
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
உயிரோடு உயிரானீரே எந்தன் மனதாலும் நினைவானீரே -(2) எந்தன் மனதாலும் நினைவானீரே சிந்தைக்கு விருந்தானீரே நோய் தீர்க்கும் மருந்தானீரே -(2) - எந்தன் நோய் தீர்க்கும் மருந்தானீரே -(2) இந்த பூமியிலே நானோ பரதேசி உந்தன் மெய்யான வார்த்தைகளால் உயிர் வாழ்கிறேன் -(2) வழி சத்தியம் ஜீவன் நீரே வாழ்க்கைக்கு ஒளியானீரே -(2) பஞ்சம் வந்தாலும் பசி நேர்ந்தாலும் அது உம் அன்பை என்னை விட்டு பிரிக்காதையா -(2) தாயினும் உயர்ந்தவரே தந்தையும் மேலானீரே - பெற்ற -(2) உம்மை காட்டித்தந்தேன் உம்மை மறுதலித்தேன் கொடும் சிலுவையிலே உம்மை நானும் அறிந்தேனையா -(2) ஆனாலும் அழைத்தீரையா அன்போடு அணைத்தீர்ய்யா -(2) என்னை மார்போடு அணைத்தீரய்யா