பாடல் #367
ஆண்டவரே இயேசுவே
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
ஆண்டவரே இயேசுவே அண்டிவந்தேன் உம்மையே அடைக்கலம் நீர் தானையா ஆறுதலும் நீர் தானையா... - 2 நீர் எனக்கு அடைக்கலமாய் இருப்பதனாலே இக்கட்டுக்கு விலக்கி என்னை காத்துக்கொள்வீர்... - 2 இரட்சண்யப் பாடல்கள் என்னை சூழ வைத்தவரே... - 2 என்றும் உம்மை பாடி துதிப்பேன் (ஆண்டவரே இயேசுவே...) நீர் எனக்கு போதகராய் இருப்பதனாலே நான் நடக்கும் வழியை எனக்கு காட்டுவீர்... - 2 என்மீது உந்தன் கண்ணை என்றுமே நீர் வைத்து... - 2 ஆலோசனை சொல்லுவீர் (ஆண்டவரே இயேசுவே...) வலதுபுறம் இடதுபுறம் சாய்ந்து நான் போவதனாலே வழியிதுவே இதிலே நடவென்று சொல்லுவீர்... - 2 உமது இனிய குரலைக் கேட்டு எனதுசெவியைசாய்த்துக்கொண்டு உமது வழியில் நடப்பேனையா (ஆண்டவரே இயேசுவே...)