பாடல் #9624
இயேசுவே என் தேவனே
🔤 Yesuvae En Devanae
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே என் தேவனே - உம்மை நான் என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன் 1. என் அருமை இயேசுவே அவனியில் உம்மை நான் -2 அனுதினமும் போற்றித் துதித்திடுவேன் - இயேசுவே 2. பரலோகில் வீற்றிருக்கும் பரிசுத்த தேவனே -2 பயத்துடன் பரிசுத்தமாய் பணிந்து தொழுதிடுவேன் -- இயேசுவே 3. பாரக் குருசில் தொங்கி ஜீவன் விட்ட தேவனே -2 ஒரு போதும் உம்மை நான் மறக்க மாட்டேன் - இயேசுவே 4. உருக்கமும் இரக்கமும் நிறைந்த நல்ல தேவனே -2 முழங்கால்படியிட்டு குனிந்து பணிந்திடுவேன் - இயேசுவே 5. ஆவியாய் இருக்கிற என் பிதாவும் தேவனே -2 - ஆவியோடும் உண்மையோடும் பக்தியுடன் தொழுதிடுவேன் ! - இயேசுவே 6. மிகப் பெரியவர் எந்தன் இயேசு தேவனே -2 முகங்குப்புற விழுந்து பொற்பாதம் பணிந்திடுவேன் - இயேசுவே 7, வானாதி வானங்களும் கொள்ளமாட்டா தேவனே -2 பயந்து நடுநடுங்கி சாஷ்டாங்கமாய் பணிவேன் - இயேசுவே 8. கருணையின் தேவனை கர்த்தாதி கர்த்தரை -2 கரங்கள் குவித்து சிரம் தாழ்த்தி தொழுதிடுவேன் - இயேசுவே 9, ஸ்தோத்திரித்துத் துதித்துப் புகழ்ந்தும் போற்றிடுவேன் -2 என்றென்றும் பொற்பாதம் பணிந்து வணங்கிடுவேன் - இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae En Devanae - Ummai Naan Enrenrum Sthotthirippaen 1. En Arumai Yesuvae Avaniyil Ummai Naan -2 Anuthinamum Porrith Thuthitthituvaen - Yesuvae 2. Paralokil Veerrirukkum Parisuttha Devanae -2 Payatthudan Parisutthamaay Paninthu Thozhuthituvaen -- Yesuvae 3. Paarak Kurusil Thongki Jeevan Vitta Devanae -2 Oru Pothum Ummai Naan Marakka Maattaen - Yesuvae 4. Urukkamum Irakkamum Niraindha Nalla Devanae -2 Muzhangkaalpatiyittu Kuninthu Paninthituvaen - Yesuvae 5. Aaviyaay Irukkira En Pithaavum Devanae -2 - Aaviyotum Unmaiyotum Pakthiyudan Thozhuthituvaen ! - Yesuvae 6. Migap Periyavar Endhan Yesu Devanae -2 Mugangkuppura Vizhunthu Porpaadham Paninthituvaen - Yesuvae 7, Vaanaathi Vaananggalum Kollamaattaa Devanae -2 Payanthu Natunatungki Saashtaanggamaay Panivaen - Yesuvae 8. Karunaiyin Devanai Kartthaathi Karttharai -2 Karanggal Kuvitthu Siram Thaazhtthi Thozhuthituvaen - Yesuvae 9, Sthotthiritthuth Thuthitthup Pugazhnthum Porrituvaen -2 Enrenrum Porpaadham Paninthu Vanangkituvaen - Yesuvae