பாடல் #7979
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
🎙 சாது. C. செல்வராஜ்
இயேசுவே, இயேசுவே, இயேசுவே, இயேசுவே எந்தன் தேவனே, என்றும் ஸ்தோத்திரம் - இயேசுவே 1. அன்பின் ஆண்டவர் - ஆத்தும நேசரை ஆருயிர் ஈந்த - அருமை இரட்சகரே அற்பனம் அடியான் - அனுதினம் ஸ்தோத்திரிப்பேன் 2. விண்ணின் ஜோதியே - விண்ணினை ஆள்பவனை மண்ணால் என்னை - மகிமையில் சேர்ப்பவர் மறவாமல் தினமும் - மகிழ்ந்து ஸ்தோத்திரிப்பேன் 3. ஜீவ தேவனே - ஜீவ தயாபர ரா ஜீவனற்ற எனக்கு - ஜீவன் தந்தாரே ஜீவனுள்ள நாளெல்லாம் - துதித்து ஸ்தோத்திரிப்பேன் 4, பாவியாம் எந்தன் - பாவம் போக்க வரை துரோகியும் என்னைத் - தூய்மையாக்கினவரை தூசியும் அடியான் - என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன் 5. ஸ்தோத்திர பலியை - தேவனுக்கே செலுத்தி ஸ்தோத்திரம் பாலியினால் - தேவ கிருபை பெருகிட ஸ்தோத்திரத்துடன் நான் - ஜெபத்தில் விளித்திருப்பேன்