பாடல் #9092
ஸ்தோத்திரம் இயேசு நாதா
🔤 Sthotthiram Yesu Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் இயேசு நாதா துதி உமக்கே ஸ்தோத்திரம் என் இதயம் உம்மையே சாரும் ஏழையின் ஜெபம் கேளும் (2) 1. அத்தி மரங்களெல்லாம் ஒன்றாய் துளிர்விடா நேரம் ஆட்டு மந்தையிலும் இன்றும் முதல் இழந்தாலும் ஆச்சரியமாய் நடத்துவீரே அற்புதரே தேடிவந்தேன் ஏழையின் ஜெபம் கேளும் 2. நியாயம் இழந்தாலும் நீரே நீதி செய்திடுவீர் காயம் ஆறிடவே எந்தன் சகாயரானீரே ஆற்றிடுவீர் போற்றிடுவேன் ஆதி அன்பை நாடி வந்தேன் ஏழையின் ஜெபம் கேளும் 3. அந்தகாரமதில் எந்தன் நிந்தை மாற்றிடுவீர் எந்த வேளையிலும் இரட்சகர் என் தன் கரம் பிடிப்பீர் உந்தன் கிருபை தந்தருள்வீர் வந்தேன் நாடி இந்த வேளை ஏழையின் ஜெபம் கேளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Yesu Naathaa Thuthi Umakkae Sthotthiram En Idhayam Ummaiyae Saarum Aezhaiyin Jebam Kaelum (2) 1. Atthi Maranggalellaam Onraay Thulirvitaa Naeram Aattu Manthaiyilum Inrum Mudhal Izhanthaalum Aacchariyamaay Natatthuveerae Arpudharae Thaetivanthaen Aezhaiyin Jebam Kaelum 2. Niyaayam Izhanthaalum Neerae Neethi Seythituveer Kaayam Aaridavae Endhan Sakaayaraaneerae Aarrituveer Porrituvaen Aathi Anpai Naati Vanthaen Aezhaiyin Jebam Kaelum 3. Andhakaaramathil Endhan Ninthai Maarrituveer Endha Vaelaiyilum Iratsakar En Than Karam Pitippeer Undhan Kirupai Thandharulveer Vanthaen Naati Indha Vaelai Aezhaiyin Jebam Kaelum