பாடல் #804
எங்கே தேடுவேன்
🔤 Engkae Thaetuvaen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கே தேடுவேன் - நான் எங்கே தேடுவேன் என் நேசர் இயேசுவை - நான் எங்கே தேடுவேன் 1. உன்னதராஜனே - ஆ - என் உத்தம நேசரே உம் உன்னத அன்பாலே - ஆ - என் உள்ளம் உருகுதே 2. மலரின் நடுவிலோ நேசரை மல்லிகை வனத்திலோ மாடி வீடதிலோ இல்லையேல் மன்னர் மத்தியிலோ 3. அழகாய் மான்போலே - நேசர் அலைந்து வாராரே - அரச குமாரருள் ஆ என் அன்பர் ஒருவரே 4. காட்டுமரங்களுள் நேசர் கிச்சிலி மரம்போலாம் கமழும் மலர்களுள் நேசர் இன்ப லீலியாம் 5. அழகு வாய்ந்தவர் - நேசர் அன்பு மிகுந்தவர் அறிவு மிகுந்தவர் - நேசர் அனைத்தும் அறிபவர் 6. காலைத் தேடுவேன் நேசரைக் கண்டு மகிழ்வேன் கருத்தாய் பாடுவேன் நேசரின் காதல் நாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Engkae Thaetuvaen - Naan Engkae Thaetuvaen En Naesar Yesuvai - Naan Engkae Thaetuvaen 1. Unnatharaajanae - Aa - En Utthama Naesarae Um Unnatha Anpaalae - Aa - En Ullam Urukuthae 2. Malarin Natuvilo Naesarai Mallikai Vanatthilo Maati Veedathilo Illaiyael Mannar Matthiyilo 3. Azhakaay Maanpolae - Naesar Alainthu Vaaraarae - Arasa Kumaararul Aa En Anbar Oruvarae 4. Kaattumaranggalul Naesar Kichsili Marampolaam Kamazhum Malarkalul Naesar Inba Leeliyaam 5. Azhaku Vaayndhavar - Naesar Anpu Mikundhavar Arivu Mikundhavar - Naesar Anaitthum Aribavar 6. Kaalaith Thaetuvaen Naesaraik Kantu Makizhvaen Karutthaay Paatuvaen Naesarin Kaadhal Naatuvaen