பாடல் #35777
என் இயேசுவே ஏன் இந்த
🔤 En Yesuvae Aen Indha
🎙 Pr. T. இன்பகுமார் • 💿 இயேசுவின் பிரசன்னம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே ஏன் இந்த பாடுகளோ ஏழை என்னை வாழ வைக்க தேடி நீர் வந்ததாலோ 1.கேட்போர்க்கு மறுக்காமல் கொடுத்திட்ட கரங்களில் ஏன் இரத்தக் காயங்களோ (2) சொல் கேளாமல் நான் செய்த கொடுமைகள் யாவும் ஓர் ஆனியாய் பாய்ந்ததாலோ (2) 2. கூப்பிட்ட குரல் கேட்டு ஓடோடி வந்திட்ட பாதங்கள் சிதைந்ததேனோ (2) சீர்கேடாய் நான் செய்த பாதகம் அனைத்தும் ஓர் கூராணி ஆனதாலோ (2) 3. உழப்பட்ட நிலம்போல உம் திருமேனி உருகுலைந்து நின்றதேனோ (2) உலகோரின் பாவங்கள் அனைத்தும் ஓர் சாட்டையாய் உடலினை வதைத்ததாலோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae Aen Indha Paatugalo Aezhai Ennai Vaazha Vaikka Thaeti Neer Vandhathaalo 1.kaetporkku Marukkaamal Kotutthitta Karanggalil Aen Ratthak Kaayanggalo (2) Sol Kaelaamal Naan Seytha Kotumaigal Yaavum Or Aaniyaay Paayndhathaalo (2) 2. Kooppitta Kural Kaettu Ototi Vanthitta Paadhanggal Sithaindhathaeno (2) Seerkaetaay Naan Seytha Paadhakam Anaitthum Or Kooraani Aanathaalo (2) 3. Uzhappatta Nilampola Um Thirumaeni Urukulainthu Nindrathaeno (2) Ulakorin Paavanggal Anaitthum Or Saattaiyaay Udalinai Vathaitthathaalo