பாடல் #32865
உயிர் நண்பனே இளம் தோழியே
🔤 Uyir Nanpanae Ilam Thozhiyae
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: A Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 150 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர் நண்பனே இளம் தோழியே ! உந்தன் வாலிபம் இயேசு ஒருவருக்கே ! உந்தன் வார்த்தையில் உந்தன் நடக்கையில் உந்தன் அன்பினில் உந்தன் ஆவியில் விசுவாசம் கற்பிலும் முன்மாதிரி நீயே - உயிர் நண்பனே சூரியன் சந்திரன் அந்தகாரமடையுமே ஒளிவீசும் வாலிபம் அதுபோல மங்கிடுமே கால்கள் தள்ளாடும் கண்கள் இருண்டுபோகும் உன் சிருஷ்டிகரை இன்றே ஏற்றுக்கொள் இயேசுவை இன்றே ஏற்றுக்கொள் நண்பனே - உயிர் நண்பனே எந்திரம்போன்ற பற்கள் விழுந்துபோகுமே மலர்போன்ற உதடுகள் உலர்ந்து போகுமே கீதம் பாடும் குரல் வளங்கள் குறைந்துவிடும் செயல்படு இயேசுவுக்காய் இன்றே எழும்பிடு நண்பா நீ எழும்பிடு - உயிர் நண்பனே அச்சமும் பயமும் வழியினில் தோன்றுமே பெலத்தின் நாட்களெல்லாம் மறைந்தேபோகுமே ஆசைகள் அழிந்திடும் பசியும் மறைந்திடும் தீங்கு நாட்கள் வரும் நண்பனே இயேசுவுக்காய் எழும்பிடு நண்பனே - உயிர் நண்பனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyir Nanpanae Ilam Thozhiyae ! Undhan Vaalibam Yesu Oruvarukkae ! Undhan Vaartthaiyil Undhan Natakkaiyil Undhan Anpinil Undhan Aaviyil Visuvaasam Karpilum Munmaathiri Neeyae - Uyir Nanpanae Sooriyan Santhiran Andhakaaramataiyumae Oliveesum Vaalibam Athupola Mangkitumae Kaalkal Thallaatum Kankal Iruntupokum Un Sirushtigarai Inrae Aerrukkol Yesuvai Inrae Aerrukkol Nanpanae - Uyir Nanpanae Enthirampondra Parkal Vizhunthupokumae Malarpondra Udhatugal Ularnthu Pokumae Keedham Paatum Kural Valanggal Kurainthuvitum Seyalpatu Yesuvukkaay Inrae Ezhumpitu Nanpaa Nee Ezhumpitu - Uyir Nanpanae Acchamum Payamum Vazhiyinil Thonrumae Pelatthin Naatkalellaam Marainthaepokumae Aasaigal Azhinthitum Pasiyum Marainthitum Theengku Naatkal Varum Nanpanae Yesuvukkaay Ezhumpitu Nanpanae - Uyir Nanpanae