பாடல் #2591
துதி துதி என் மனமே
🎙 கிறிஸ்தவ பாடல்
துதி துதி என் மனமே துதிகளின் உன்னதனை (2) தூத கணங்கள் வாழ்த்திப் புகழ்ந்திடும் வானவர்; இயேசுவின் நாமமதை (2) பாவமாம் காரிருள் சூழ்ந்திடும் வேளை இரட்சிக்க தீபமாய் வந்தார்; (2) அற்புதமாய் நம்மை நடத்திடும் இயேசு அன்பரின் காயங்கள் கண்டே (2) கல்வாரியில் அன்று சிந்தின ரத்தம் கழுவிடும் பாவங்களை (2) கண்ணீரைத் துடைக்கும் அவரது அன்பு கல்மனம் கரைத்திடுமே (2) சீக்கிரமாய் இதோ வருகிறேன் என்றவர்; சீக்கிரம் வந்திடுவார்; (2) உன்னத தேவனின் மகிமையைக் காண உள்ளமும் ஏங்கிடுதே (2)