பாடல் #6909
ஒரு போதும் மறவாத
🔤 Oru Pothum Maravaadha
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: D Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு போதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க உனக்கென்ன குறை மகனே சிறுவந்தொட்டுனை யரு செல்லப் பிள்ளைபோற் காத்த உரிமைத் தந்தை யென்றென்றும் உயிரோடிருப்பாருன்னை. கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார் கதறுமுன் சத்தங்க்கேட்டால் கடல் புசலமர்த்துவார் எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார் ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார் கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயே கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயே விடுவாளோ பிள்ளையைத் தாய் மேதினியிற்றனியே மெய்ப் பரனை நீதினம் விசுவாசித்திருப்பாயே உன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமா உறக்க மில்லாதவவ்ர் கண் உன்னைவிட் டொழியுமா இந்நில மதீலுனக் கென்னவந்தாலும் சும்மா இருக்குமா அவர்மனம் உருக்கமில்லாதே போமா உலகப் பேயுடலாசை உன்னை மோசம் செய்யாது ஊக்கம் விடாதே திருவுளமுனை மறவாது இலக்கும் பரிசுத்தாவி எழில் வரம் ஒழியாது என்றும் மாறா நண்பன் இரட்சகருடன் சேர்ந்து.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Pothum Maravaadha Unmaip Pithaavirukka Unakkenna Kurai Makanae Siruvanthottunai Yaru Sellap Pillaipor Kaattha Urimaith Thanthai Yenrenrum Uyirotiruppaarunnai. Kappalinatith Thattil Kalaippudan Thoongkuvaar Katharumun Satthangkkaettaal Katal Pusalamartthuvaar Epperiya Porilum Aertra Aayudhameevaar Aezhaippillai Unakku Aertra Thanthai Naanenpaar Katal Thanak Kathikaari Karttharen Rarivaayae Katavaathirukka Vellai Karpitthaaravarsaeyae Vituvaalo Pillaiyaith Thaay Maethiniyirtraniyae Meyp Paranai Neethinam Visuvaasitthiruppaayae Unnaasai Visuvaasam Jebamum Veenaakumaa Urakka Millaadhavavr Kan Unnaivit Tozhiyumaa Innila Matheelunak Kennavanthaalum Summaa Irukkumaa Avarmanam Urukkamillaathae Pomaa Ulakap Paeyudalaasai Unnai Mosam Seyyaathu Ookkam Vitaathae Thiruvulamunai Maravaathu Ilakkum Parisutthaavi Ezhil Varam Ozhiyaathu Enrum Maaraa Nanpan Iratsakarudan Saernthu.
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm Dm