பாடல் #2399
சேனைகளின் கர்த்தாவே
🎙 கிறிஸ்தவ பாடல்
சேனைகளின் கர்த்தாவே உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள் ஆயிரம் நாளைப் பார்க்கினும் உமது பிரகாரத்தில் ஒருநாள் நல்லது ஆகாமிய கூடாரங்கள் அழியுமே எந்தன் தேவா உந்தன் வாசலில் காத்திருந்தால் போதுமே சாலமோன் தேவ ஆலயம் உந்தனின் மகிமையால் நிறைந்தது போலவே எந்தனை நிரப்பிடும் இயேசுவே நான் உந்தனின் மகிமையை ஊருக்கெல்லாம் சொல்லுவேன் ஊற்றிடும் உந்தன் ஆவியை உந்தனின் பிள்ளைகள் எங்களின் மீதிலே அனல் மூட்டி எழுப்பிடும் தேவனே நான் ஆவியாலே நிறைந்து உமக்காக வாழ்ந்திட