பாடல் #1822
சீயோனின் மங்களப் பாடல்களை
🔤 Seeyonin Manggalap Paadalkalai
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோனின் மங்களப் பாடல்களை சீரேசுநாதனுக்கு பாடிடுவோம் நன்றியோடும் துதியோடும் கெம்பீரமாய் பாடிடுவோம் 1. பூரண வடிவுள்ள சீயோனிலே மகிமையின் தேவன் பிரகாசிப்பார் குறித்திட்ட காலம் வந்திட்டதே சீயோனில் தேவன் வெளிப்படுவார் 2. சீயோனின் நடுவில் நம் தேவன் என்றென்றும் பெரியவராய் இருப்பார் ஆக்கினை எல்லாம் அகற்றிவிட்டார் சீயோனில் தேவன் கெம்பீரிப்பார் 3. சீயோனின் கறைகளை நீக்கிடுவார் மகிமையின் சபையாய் மாற்றிடுவார் சேனையின் திரளாய் பெருகச் செய்வார் சீயோனில் தேவன் உயர்ந்திருப்பார் 4. சீயோனில் வேதம் வெளிப்படுமே கர்த்தரின் வசனம் உயர்ந்திடுமே பூமியின் சகல ஜாதிகளும் சீயோனில் தேவனை கண்டிடுவார் 5. சீயோனின் வல்லமை பெருகிடுமே சாத்தானின் சேனைகள் சிதறிடுமே தடைகள் யாவும் நீங்கிடுமே சீயோனை மகிமை சூழ்ந்திடுமே 6. மகிமையின் தேவன் மகிமையோடே அதிவிரைவாக வந்திடுவார் மாட்சிமை நிறைந்த ராஜ்ஜியத்தில் சீயோனை தேவன் சேர்த்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyonin Manggalap Paadalkalai Seeraesunaadhanukku Paatituvom Nanriyotum Thuthiyotum Kempeeramaay Paatituvom 1. Poorana Vativulla Seeyonilae Makimaiyin Devan Pirakaasippaar Kuritthitta Kaalam Vanthittathae Seeyonil Devan Velippatuvaar 2. Seeyonin Natuvil Nam Devan Enrenrum Periyavaraay Iruppaar Aakkinai Ellaam Agarrivittaar Seeyonil Devan Kempeerippaar 3. Seeyonin Karaigalai Neekkituvaar Makimaiyin Sapaiyaay Maarrituvaar Saenaiyin Thiralaay Perugach Seyvaar Seeyonil Devan Uyarnthiruppaar 4. Seeyonil Vaedham Velippatumae Karttharin Vasanam Uyarnthitumae Poomiyin Sakala Jaathigalum Seeyonil Devanai Kantituvaar 5. Seeyonin Vallamai Perukitumae Saatthaanin Saenaigal Sidharitumae Thataigal Yaavum Neengkitumae Seeyonai Makimai Soozhnthitumae 6. Makimaiyin Devan Makimaiyotae Athiviraivaaga Vanthituvaar Maatsimai Niraindha Raajjiyatthil Seeyonai Devan Saertthituvaar