பாடல் #2373
என் தேவனே என் தந்தையே
🔤 En Devanae En Thanthaiyae
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே என் தந்தையே நான் உம்மைத் தேடியே அலைந்தேனே -2 1. பாவியாய் இருந்தேன் பாவத்தில் மரித்தேன் பரனை அறியாமலே -2 மரணத்தின் வழியில் மதிகெட்டு நடந்தேன் -2 மன்னவா உம்மையும் தேடச்செய்தீரே -2 2. என் சிருஷ்டிகரே நான் உலகினில் உம்மை தேடியே அலைந்தேனே -2 உம்மைக் காணாமல் உயிரை யான் தெஜிக்க -2 துணிந்ததோர் வேளை என்னை சந்தித்தீரே -2 3. கடினத்தை மாற்றி காரிருள் போக்கி கருணையாய் சந்தித்தீரே -2 வல்லமையைக் காண்பித்து வல்லமையால் நிறைத்து - 2 உம்மைக் காண்பிக்கச் சித்தம் கொண்டீரே -2 4. சிலுவையில் தொங்கி சிலுவையில் மாண்ட காட்சியளித்தீரே பாவத்தைப் போக்கி சாபத்தை நீக்கி -2 என்னை இரட்சித்து ஏற்றுக் கொண்டீரே -2 5. தரிசனம் தந்து தரிசிக்கச் செய்தீர் தரணியில் அடியானை -2 சமாதானம் அளித்தீர் சந்தோஷம் அளித்தீர் -2 அளவில்லா ஆசீர்வாதம் அளித்தீர் -2 6. தேடு கண்டடைவாய் தேடு பிழைப்பாய் என்று மொழிந்தவரே -2 வாக்குத்தத்தங்களை நிறைவேறச் செய்யும் -2 வாக்கு மாறாத தேவா நான் மறவேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae En Thanthaiyae Naan Ummaith Thaetiyae Alainthaenae -2 1. Paaviyaay Irunthaen Paavatthil Maritthaen Paranai Ariyaamalae -2 Maranatthin Vazhiyil Mathikettu Natanthaen -2 Mannavaa Ummaiyum Thaedachseytheerae -2 2. En Sirushtigarae Naan Ulakinil Ummai Thaetiyae Alainthaenae -2 Ummaik Kaanaamal Uyirai Yaan Thejikka -2 Thunindhathor Vaelai Ennai Santhittheerae -2 3. Katinatthai Maarri Kaarirul Pokki Karunaiyaay Santhittheerae -2 Vallamaiyaik Kaanpitthu Vallamaiyaal Niraitthu - 2 Ummaik Kaanpikkach Sittham Konteerae -2 4. Siluvaiyil Thongki Siluvaiyil Maanda Kaatsiyalittheerae Paavatthaip Pokki Saabatthai Neekki -2 Ennai Iratsitthu Aerruk Konteerae -2 5. Tharisanam Thanthu Tharisikkach Seytheer Tharaniyil Atiyaanai -2 Samaathaanam Alittheer Santhosham Alittheer -2 Alavillaa Aaseervaadham Alittheer -2 6. Thaetu Kandataivaay Thaetu Pizhaippaay Enru Mozhindhavarae -2 Vaakkutthatthanggalai Niraivaerach Seyyum -2 Vaakku Maaraadha Thaevaa Naan Maravaen -2