பாடல் #170
எல்லாமே மண்ணு தானிய
🔤 Ellaamae Mannu Thaaniya
🎙 Sis. கிளாரா கனகராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாமே மண்ணுதானையா எல்லாமே மாயைதானையா சூரியனின் கீழே நடப்பதும் காண்பதுவும் எல்லாமே மண்ணுதானையா எண்ணிப்பார்த்தால் எல்லாமே மண்ணுதானையா சிந்தித்துப் பார்த்தால் எல்லாமே மண்ணுதானையா - எல்லாமே 1. பையூரம் தாய் வயிற்றில் 10 மாதம் இருந்தும் பொய்யூரம் இங்கு வந்து குழந்தையாக பிறந்ததுவும் எத்தனை நாள் இருப்போம் என்று உத்திரவாதம் இல்லை ஐயா சத்தியபரன் தேவன் தந்த ஜீவன் கூட இரவலையா - எல்லாமே 2. பொன்னாக மதிக்கப்படும் மண்ணான மாய உடல் பூப் போல வதங்கிவிடும் ஜீவன் போனால் பூத உடல் கருவோடு வந்ததையா ஆட்டம் போடும் நீச உடல் கருவாட்டுக்கு இருக்கும் விளை இதற்கில்லையே நாற்ற உடல் - எல்லாமே 3. கட்டிய மனைவியும்! பெற்றெடுத்த பிள்ளைகளும் சேர்த்து வைத்த சொத்துகளும் கூட ஒன்று வருவதில்லை பாதியிலே வந்ததையா! மாயமாகி போகுதையா நீதிதேவன் கொடுத்ததையா! அதுவும் நமக்கு இரவலையா 4. மண்ணான உன்னை சந்திக்க மனிதராக இயேசு வந்தார் பொன்னான ஆத்துமாவை மரணத்திலே மீட்டுவிட்டார் அவர் பாதம் வந்தவர்களுக்கு மோட்ச வழி காட்டுகின்றார் ஆத்துமாவை மீட்டு மோட்சத்திலே வாழ வைப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaamae Mannuthaanaiyaa Ellaamae Maayaithaanaiyaa Sooriyanin Keezhae Natappathum Kaanpathuvum Ellaamae Mannuthaanaiyaa Ennippaartthaal Ellaamae Mannuthaanaiyaa Sinthitthup Paartthaal Ellaamae Mannuthaanaiyaa - Ellaamae 1. Paiyooram Thaay Vayirril 10 Maadham Irunthum Poyyooram Ingku Vanthu Kuzhanthaiyaaga Pirandhathuvum Etthanai Naal Iruppom Enru Utthiravaadham Illai Aiyaa Satthiyaparan Devan Thandha Jeevan Kooda Iravalaiyaa - Ellaamae 2. Ponnaaga Mathikkappatum Mannaana Maaya Udal Poop Pola Vathangkivitum Jeevan Ponaal Poodha Udal Karuvotu Vandhathaiyaa Aattam Potum Neesa Udal Karuvaattukku Irukkum Vilai Idharkillaiyae Naartra Udal - Ellaamae 3. Kattiya Manaiviyum! Perretuttha Pillaigalum Saertthu Vaittha Sotthugalum Kooda Onru Varuvathillai Paathiyilae Vandhathaiyaa! Maayamaaki Pokuthaiyaa Neethidevan Kotutthathaiyaa! Athuvum Namakku Iravalaiyaa 4. Mannaana Unnai Santhikka Manidharaaga Yesu Vanthaar Ponnaana Aatthumaavai Maranatthilae Meettuvittaar Avar Paadham Vandhavarkalukku Motsa Vazhi Kaattukinraar Aatthumaavai Meettu Motsatthilae Vaazha Vaippaar