பாடல் #15909
என் தலை தண்ணீரும்
🎙 Pr. L. ஜோசப் • 💿 முழங்கால் யுத்தம் ஜெபப்பாடல்கள்
என் தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும் ஆனால் அது எனக்கு நலமாயிருக்கும் ஆனால் அதுவே என் ஜெபமாயிருக்கும் நான் இரவும் பகலும் கதறி ஜெபித்திட நான் கதறி கதறி கண்ணீர் வடித்திட கோடான கோடி ஜனம் நிறைந்த தேசம் இது பத்தில் ஒரு பங்கு கூட உண்மை அறியல இந்த பக்தி உள்ள தேசத்திற்கு இயேசுவை தெரியல சாபத்தால் அடிமைப்பட்டுப் போன தேசமிது சாபத்தின் கட்டுகள் அறுக்க யாரும் இங்கில்ல இந்த சாபத்தின் கட்டுகள் அறுக்க சபையை எழுப்புமே பாவத்தின் அகோரத்தில் அழிந்திடும் தேசமிது பரிந்து பேசிட ஆட்கள் தாருமே பரிசுத்தமாகவே என் தேசம் மாறிட