பாடல் #15902
தாயின் கருவிலே முன்குறித்தீர்
🎙 Pr. மோசே பிலேமோன் • 💿 ஸீன் ஆராதனை பேண்ட் பாடல்கள்
தாயின் கருவிலே முன்குறித்தீர் தாயினும் மேலாக தாங்கினீர் உம அன்பின் நிழலிலே என்னை வளர்த்தீர் கன்மலை மேலே என்னை நிறுத்தினீர் அடைக்கலம் நீரே அறனும் நீரே கேடயம் நீரே கோட்டையும் நீரே 1. என்னை மீட்கும் பொருட்டு உம்மை பலியாக தந்தீர் நீர் என் மேல் வைத்த அன்பினால் – உந்தன் மகிமையின் மேன்மையை துறந்தீரே 2. என்னை காக்கும் பொருட்டு உந்தன் தூதர்கள் தந்தீர் வாதை என்னை அணுகாமல் – உந்தன் சிறகுகளால் என்னை மறைத்தீரே