பாடல் #1407
எத்தனை நாட்கள் செல்லும்
🔤 Etthanai Naatkal Sellum
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின் சுவிசேஷம் அத்தனை நாட்டவரும் அறிய எத்தனை நாட்கள் செல்லும்? ஆடுகள் ஏராளம் அலைந்து திரிந்திடுதே தேடுவோர் யாவருக்கும் என் பெலன் தாராளம் சாத்தானின் சக்திகளும் பெருகிடும் நாட்களிலே தேவனின் பிள்ளைகட்குள் ஒருமனம் என்று வரும்? தேவைகள் நிறைந்து நிற்க வாய்ப்புகள் நழுவிச் செல்ல தாழ்மையாய் ஊழியர்கள் இணைவது என்று வரும்? கோபங்கள், சீற்றங்களும், பொறாமையும், பிரிவுகளும் ஊழியர் என்று சொல்வார் நடுவினில் என்றகலும்? உண்மையாம் கோதுமைகள் மணியாக மண் அடியில் மறைந்திடும் நாள் வருமா? நாம் உடைபடும் நாள் வருமா?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Etthanai Naatkal Sellum Yesuvin Suvisaesham Atthanai Naattavarum Ariya Etthanai Naatkal Sellum? Aatugal Aeraalam Alainthu Thirinthituthae Thaetuvor Yaavarukkum En Pelan Thaaraalam Saatthaanin Sakthigalum Perukitum Naatkalilae Devanin Pillaigatkul Orumanam Enru Varum? Thaevaigal Nirainthu Nirka Vaayppugal Nazhuvich Sella Thaazhmaiyaay Oozhiyarkal Inaivathu Enru Varum? Kobanggal, Seertranggalum, Poraamaiyum, Pirivugalum Oozhiyar Enru Solvaar Natuvinil Endrakalum? Unmaiyaam Kothumaigal Maniyaaga Man Atiyil Marainthitum Naal Varumaa? Naam Utaibatum Naal Varumaa?