பாடல் #1381
எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து
🔤 Engkumullor Yaarum Saernthu
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே இஸ்ரவேலின் கர்த்தருக்கு துதி செலுத்துமே யாக்கோபின் சந்ததியாரும் கூடிவாருமே இயேசு எங்கள் கர்த்தர் என்றே ஸ்தோத்தரிப்போமே 1. தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே கடந்தகால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே ஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே கோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர் செத்ததாகில் பலன் மிகுதி - ஸ்தோத்தரிப்போமே! 2. நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமே இராஜாவின் கட்டளைக்கு கனம் கொடுப்போமே தேவ சமூகம் பழக்கம் உள்ளோர் பயப்பட மாட்டார் கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார் அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும் நித்திய மகிழ்ச்சி அவரைமூடும் ஸ்தோத்தரிப்போமே! 3. அத்திமரம் துளிர்விடாமல் போனபோதிலும் திராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும் ஒலிவமரத்தின் பலன்கள்கூட அற்றுப் போயினும் வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்த போதிலும் இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Engkumullor Yaarum Saernthu Sthottharippomae Isravaelin Karttharukku Thuthi Selutthumae Yaakkopin Sandhathiyaarum Kootivaarumae Yesu Enggal Kartthar Enrae Sthottharippomae 1. Thaeva Maindhan Yesuvukkaay Sthottharippomae Parisutthaagamam Eendhatharkaay Sthottharippomae Katandhakaala Veerarukkaay Sthottharippomae Jeevan Vitta Suttharukkaay Sthottharippomae Kothumai Mani Thanitthaal Ilaabam Aethu Untu Paareer Setthathaakil Palan Mikuthi - Sthottharippomae! 2. Nampikkai Izhakkaavannam Mun Natappomae Iraajaavin Kattalaikku Kanam Kotuppomae Thaeva Samoogam Pazhakkam Ullor Payappata Maattaar Keezhppatiyak Karrukkontor Thatumaartram Kollaar Avarkkaay Izhandhavarkkup Parisu Nooratthanaiyaagak Kittum Nitthiya Makizhchsi Avaraimootum Sthottharippomae! 3. Atthimaram Thulirvitaamal Ponapothilum Thiraatsaich Setiyil Kani Kaanaamal Karukippoyinum Olivamaratthin Palankalkooda Arrup Poyinum Vayalil Makasool Inri Aekkam Vandha Pothilum Immaikkaaga Alla Yesunaadhar Maelae Ulla Parru Nam Iruppu Paralogatthil Sthottharippomae!