பாடல் #10885
கலங்காதே திகையாதே கர்த்தர்
🔤 Kalangkaathae Thikaiyaathae Kartthar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலங்காதே திகையாதே கர்த்தர் நம்மை விடுவிப்பாரே கிருபையிலே நாம் வளர்ந்திடுவோமே கிறிஸ்துவுக்காய் ஜீவிப்போம் தேவன் பொய் சொல்ல மனிதனல்ல தேவன் மனம் மாற மனுஷனல்ல விசுவாசித்தே உரிமைக் கொள்வாய் விடுதலையை இன்றே 1. துன்பப் புயல் வீசும் போதும் துயர் அலைகள் எழும்பும் போதும் துன்பத்தில் இன்பம் துணைவர் நம் இயேசுவை துதித்து நாம் பாடிடுவோம் 2. சத்திய வார்த்தையின் வல்லமையால் சாத்தானை ஜெயித்திட கிருபை தந்தார் உன்னதர் இயேசுவின் சேவையிலே நாம் உண்மையாய் உழைத்திடுவோம் 3. பரிசுத்த அன்பினில் வளர்ந்திடவே பரிசுத்த ஆவியை பெற்றிடுவோம் அக்கினி அபிஷேகம் பெற்றிடவே அவரையே பற்றிக் கொள்வோம் 4. தேவாதி தேவன் வருகின்றாரே வேகமாய் நாமும் சென்றிடவே வேதத்தை அனுதினம் வாசித்து ஜெபித்து வேகமாய் பறந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalangkaathae Thikaiyaathae Kartthar Nammai Vituvippaarae Kirupaiyilae Naam Valarnthituvomae Kiristhuvukkaay Jeevippom Devan Poy Solla Manidhanalla Devan Manam Maara Manushanalla Visuvaasitthae Urimaik Kolvaay Vitudhalaiyai Inrae 1. Thunbap Puyal Veesum Pothum Thuyar Alaigal Ezhumpum Pothum Thunbatthil Inbam Thunaivar Nam Yesuvai Thuthitthu Naam Paatituvom 2. Satthiya Vaartthaiyin Vallamaiyaal Saatthaanai Jeyitthida Kirupai Thanthaar Unnathar Yesuvin Saevaiyilae Naam Unmaiyaay Uzhaitthituvom 3. Parisuttha Anpinil Valarnthidavae Parisuttha Aaviyai Perrituvom Akkini Apishaegam Perridavae Avaraiyae Parrik Kolvom 4. Thaevaathi Devan Varukinraarae Vaegamaay Naamum Senridavae Vaedhatthai Anuthinam Vaasitthu Jepitthu Vaegamaay Paranthituvom