பாடல் #877
இயேசுவின் பின்னால்
🔤 Yesuvin Pinnaal
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் பின்னால் நான் செல்வேன் திரும்பி பார்க்கை மாட்டேன் சிலுவையே முன்னால் உலகமே பின்னால் இயேசு சிந்திய இரத்தத்தினாலே என்றும் விடுதலையே உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று எல்லாம் உதறிவிட்டேன் உடல் பொருள் ஆவி உடைமைகள் யாவும் ஒப்புக் கொடுத்து விட்டேன் நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு என்ன நடந்தாலும் எவ்வேளையிலும் எப்போதும் துதித்திடுவேன் வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள் எதுவும் பிரிக்காது வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால் முற்றிலும் ஜெயம் பெறுவேன் நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ வாழ்வோ சாவோ வல்ல தூதரோ பிரிக்கவே முடியாது அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு ஆட்சி செய்திடணும் ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும் சபைகள் பெருகிடணும் என் சொந்த தேசம் இயேசுவுக்கே இயேசுதான் வழி என்கிற முழக்கம் எங்கும் கேட்கணுமே பழையன கடந்தன் புதியன புகுந்தன பரலோக குடிமகன் நான் மறுரூபமாகி மணவாளன் இயேசுவை முகமுகமாய் காண்பேன் இதயமெல்லாம் ஏங்குதையயா இயேசுவே உந்தன் அன்பு நதியிலே எந்நாளும் நீந்தணுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Pinnaal Naan Selvaen Thirumpi Paarkkai Maattaen Siluvaiyae Munnaal Ulakamae Pinnaal Yesu Sinthiya Ratthatthinaalae Enrum Vitudhalaiyae Ulakatthin Perumai Selvatthin Parru Ellaam Udharivittaen Udal Porul Aavi Utaimaigal Yaavum Oppuk Kotutthu Vittaen Naan Avar Aalayam Enakkullae Yesu Enna Natanthaalum Evvaelaiyilum Eppothum Thuthitthituvaen Vaedhanai Nerukkam Innalkal Idarkal Ethuvum Pirikkaathu Verri Vaendhan En Yesuvin Anpaal Murrilum Jeyam Peruvaen Nigazhkindra Kaalamo Varukindra Kaalamo Vaazhvo Saavo Valla Thoodharo Pirikkavae Mutiyaathu Akilamengkilum Aandavan Yesu Aatsi Seythidanum Aaviyil Nirainthu Satthiyam Paesum Sapaigal Perukidanum En Sondha Thaesam Yesuvukkae Yesuthaan Vazhi Enkira Muzhakkam Engkum Kaetkanumae Pazhaiyana Katandhan Puthiyana Pukundhana Paraloga Kutimakan Naan Maruroobamaaki Manavaalan Yesuvai Mugamugamaay Kaanpaen Idhayamellaam Aengkuthaiyayaa Yesuvae Undhan Anpu Nathiyilae Ennaalum Neendhanumae