பாடல் #8545
தயவுள்ள இயேசுவின் கரங்களில்
🔤 Thayavulla Yesuvin Karanggalil
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: Waltz
⏱️ Tempo: 150 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தயவுள்ள இயேசுவின் கரங்களில் தாலந்துகளை நாம் பெற்றிடுவோம் (2) 1.தரணி குலுங்கிடும்! தற்பரன் உயர்ந்திடும் தாலந்தின் வீரிய கிரியையை தலைவர் இயேசுவின் சரீர சபைக்கு தாங்கி நிற்கும் தூணாக்குவோம் தூய்மையின் வழியை வல்லமையாய் துதித்து நிற்போம் - தயவுள்ள 2.மகிமை நிறைந்திடும் மாட்சிமை பொங்கிடும் மன்னவர் இயேசுவின் கிரியையை ஐக்கிய பெலனை பெற்றிடும் சபைக்கு மங்காத மகிழ்ச்சியாய் நிறைந்திடுவோம் ஐந்து தாலந்தின் மேன்மை சேவையை புகழ்ந்து நிற்போம் - தயவுள்ள 3.தாழ்மை வளர்ந்திடும் வாழ்வு துளிர்த்திடும் வானவர் வேதத்தின் கிரியையை சிறப்பான சுதந்திரம் பெற்றிடும் சபைக்கு நம்பிக்கை நன்மையாய் பெருக்கிடுவோம் இரண்டு தாலந்தின் இனிய சேவையை உயர்த்தி நிற்போம் - தயவுள்ள 4.நிதி நிறைந்திடும் நியாயம் அழைத்திடும் சிங்காசன சீரிய கிரியையை பரிசுத்தம் அடையும் பரலோக சபைக்கு உண்மை ஊழியமாய் உயர்த்திடுவோம் தாலந்தைப் புதைத்த துல்லிய சேவையை விரட்டி நிற்போம் - தயவுள்ள 5.தூயவர் வருகையும் துதித்திடும் சத்தமும் சீக்கிரம் சந்திக்கும் கிரியையை மணவாளன் கண்டிடும் மறுரூப சபைக்கு நித்திய வாழ்வாய்க் காட்டிடுவோம் களிகூர்ந்து மகிழ்ந்து கூடி நின்று ஆர்ப்பரிப்போம் - தயவுள்ள
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thayavulla Yesuvin Karanggalil Thaalanthugalai Naam Perrituvom (2) 1.tharani Kulungkitum! Tharparan Uyarnthitum Thaalanthin Veeriya Kiriyaiyai Thalaivar Yesuvin Sareera Sapaikku Thaangki Nirkum Thoonaakkuvom Thooymaiyin Vazhiyai Vallamaiyaay Thuthitthu Nirpom - Thayavulla 2.makimai Nirainthitum Maatsimai Pongkitum Mannavar Yesuvin Kiriyaiyai Aikkiya Pelanai Perritum Sapaikku Mangkaadha Makizhchsiyaay Nirainthituvom Ainthu Thaalanthin Maenmai Saevaiyai Pugazhnthu Nirpom - Thayavulla 3.thaazhmai Valarnthitum Vaazhvu Thulirtthitum Vaanavar Vaedhatthin Kiriyaiyai Sirappaana Sudhanthiram Perritum Sapaikku Nampikkai Nanmaiyaay Perukkituvom Irantu Thaalanthin Iniya Saevaiyai Uyartthi Nirpom - Thayavulla 4.nithi Nirainthitum Niyaayam Azhaitthitum Singkaasana Seeriya Kiriyaiyai Parisuttham Ataiyum Paraloga Sapaikku Unmai Oozhiyamaay Uyartthituvom Thaalanthaip Puthaittha Thulliya Saevaiyai Viratti Nirpom - Thayavulla 5.thooyavar Varukaiyum Thuthitthitum Satthamum Seekkiram Santhikkum Kiriyaiyai Manavaalan Kantitum Marurooba Sapaikku Nitthiya Vaazhvaayk Kaattituvom Kalikoornthu Makizhnthu Kooti Ninru Aarpparippom - Thayavulla