பாடல் #847
கள்ள உபதேசம் ரொம்ப
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
கள்ள உபதேசம் ரொம்ப பெருகிவிட்டது கர்த்தர் சொன்ன கடைசிக் காலம் நெருங்கிவிட்டது-2 ஆராதனை பேரில் அட்டகாசம் பண்ணுறான் நடனம் என்ற பேரில் சபையை நாசமாக்குறான்-2 ஜாக்கிரதை கிறிஸ்தவனே ஜாக்கிரதை கள்ள ஊழியர்கள் வந்துட்டாங்க ஜாக்கிரதை -2 கட் அவுட் கிறிஸ்தவன் அதிகமாய் ஆயிட்டான் காசுக்காக கர்த்தரையே விற்க பார்க்கிறான்-2 இயேசுவுக்கு மகிமையை கொடுக்க மறந்திட்டான்-2 தனக்கே பெருமையை தேடி அலைகிறான்-2 பட்சிக்கிற அக்கினியாய் நம் தேவன் இருப்பதால் பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்திடுங்க-2 ஒநாய்களின் ஆட்டத்துக்கு ஒதுங்கி நில்லுங்க-2 பரலோகம் சென்றிட ஆயத்தமாகுங்க-2