பாடல் #37047
என் பாவங்களை
🔤 En Paavanggalai
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பாவங்களை எல்லாம் அறிக்கை செய்கிறேன் இனி பாவம் செய்யாமலே என்னை காத்துக்கொள்ளும் இயேசுவே-2 கெஞ்சி கேட்கிறேன் சிறுபிள்ளை போலவே உந்தன் கிருபையால் என்னை மன்னியும் இயேசுவே - 2 கண்களால் நான் செய்த பாவங்களை கழுவியருளும் என் இயேசுவே கரங்களால் நான் செய்த பாவங்களை காணாமல் செய்யும் என் இயேசுவே - 2 நாவினால் நான் செய்த பாவங்களை நடுக்கடலில் போடும் என் இயேசுவே உள்ளத்தால் நான் செய்த பாவங்களை உதறித் தள்ளும் என் இயேசுவே-2 பெருமையால் நான் செய்த பாவங்களை வெறுமையாக்கும் என் இயேசுவே இச்சையால் நான் செய்த பாவங்களை இல்லாமல் செய்யும் என் இயேசுவே-2 ஆத்மாவில் நான் செய்த பாவங்களை அழித்து போடும் என் இயேசுவே சரீரத்தால் நான் செய்த பாவங்களை சாம்பலாக்கும் என் இயேசுவே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Paavanggalai Ellaam Arikkai Seykiraen Ini Paavam Seyyaamalae Ennai Kaatthukkollum Yesuvae-2 Kenjsi Kaetkiraen Sirupillai Polavae Undhan Kirupaiyaal Ennai Manniyum Yesuvae - 2 Kankalaal Naan Seytha Paavanggalai Kazhuviyarulum En Yesuvae Karanggalaal Naan Seytha Paavanggalai Kaanaamal Seyyum En Yesuvae - 2 Naavinaal Naan Seytha Paavanggalai Natukkatalil Potum En Yesuvae Ullatthaal Naan Seytha Paavanggalai Udharith Thallum En Yesuvae-2 Perumaiyaal Naan Seytha Paavanggalai Verumaiyaakkum En Yesuvae Ichsaiyaal Naan Seytha Paavanggalai Illaamal Seyyum En Yesuvae-2 Aathmaavil Naan Seytha Paavanggalai Azhitthu Potum En Yesuvae Sareeratthaal Naan Seytha Paavanggalai Saambalaakkum En Yesuvae-2