பாடல் #83
அனந்தஞான சொரூபா நமா ஓம்
🔤 Anandhanjaana Soroopaa Namaa Om
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அனந்தஞான சொரூபா நமா ஓம் (நமோ நம) அனந்தஞான சொரூபா 1.கனங்கொள் மகிமையின் கர்த்தாவே காத்திர நேத்திர பர்த்தாவே நரர் காண்க வந்தாரே நமா ஓம் காண்க வந்தாரே கருணாகரதேவா அனந்தஞான சொரூபா - அன 2. துங்கவானச் சங்கையின் ராசா துத்திய மகத்துவச் சருவேசா கிருபை தோன்ற நின்றாரே நமா ஓம் தோன்ற நின்றாரே சுயாதிப கர்த்தா அனந்தஞான சொரூபா - அன 3. அந்தப் பரமானந்த குணாலா ஆதத்தின் தீதற்ற மனு வேலா எமை யாண்டு கொண்டாரே நமா ஓம் ஆண்டுகொண்டாரே ஞானாதிக்கத் துரையே அனந்தஞான சொரூபா - அன 4. ஆடுகளுக்குரிமைக் கோனே ஆரண காரணப் பெருமானே நரர்க் கன்பு கூர்ந்தானே நமா ஓம் அன்பு கூர்ந்தானே கிரு பாசனத்தானே அனந்தஞான சொரூபா - அன 5. பந்தத்துயரந் தீர்த்தாரே எங்கள் பாபத்தைச் சாபத்தை யேர்த்தாரே சென்று பார்க்கவந்தாரே நமா ஓம் பார்க்கவந்தாரே பரமாதிக்கத்தானே அனந்தஞான சொரூபா - அன 6. நெல்லை வேதநாயகன் பாட்டா நித்திய கீர்த்தன கொண்டாட்டா அரு ணீடிவந்தாரே நமா ஓம் நீடிவந்தாரே திரு நேசகுமாரா அனந்தஞான சொரூபா - அன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anandhanjaana Soroopaa Namaa Om (namo Nama) Anandhanjaana Soroopaa 1.kanangkol Makimaiyin Kartthaavae Kaatthira Naetthira Partthaavae Narar Kaanka Vanthaarae Namaa Om Kaanka Vanthaarae Karunaagarathaevaa Anandhanjaana Soroopaa - Ana 2. Thunggavaanach Sangkaiyin Raasaa Thutthiya Makatthuvach Saruvaesaa Kirupai Thondra Ninraarae Namaa Om Thondra Ninraarae Suyaathiba Kartthaa Anandhanjaana Soroopaa - Ana 3. Andhap Paramaanandha Kunaalaa Aadhatthin Theedhartra Manu Vaelaa Emai Yaantu Kontaarae Namaa Om Aantukontaarae Njaanaathikkath Thuraiyae Anandhanjaana Soroopaa - Ana 4. Aatugalukkurimaik Konae Aarana Kaaranap Perumaanae Narark Kanpu Koornthaanae Namaa Om Anpu Koornthaanae Kiru Paasanatthaanae Anandhanjaana Soroopaa - Ana 5. Pandhatthuyaran Theertthaarae Enggal Paabatthaich Saabatthai Yaertthaarae Senru Paarkkavanthaarae Namaa Om Paarkkavanthaarae Paramaathikkatthaanae Anandhanjaana Soroopaa - Ana 6. Nellai Vaedhanaayakan Paattaa Nitthiya Keertthana Kontaattaa Aru Neetivanthaarae Namaa Om Neetivanthaarae Thiru Naesakumaaraa Anandhanjaana Soroopaa - Ana