பாடல் #473
இயேசு ராஜா எனை ஆளும்
🔤 Yesu Raajaa Enai Aalum
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜா எனை ஆளும் நேசா - 2 1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே முனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே இங்கெனின் மேலே அன்பு செய் 2. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா! சதானந்தா வானந்தா உவந்தாள் மிக வந்தனம் வந்தனம்! 3. ஐயா என் மனம் ஆற்றி உன தடிமை எந்தனை தேற்றி குணமாக்கி வினை நீக்கி கைதூக்கி மெய்ப் பாக்கியம் கொடு 4. சுத்த திருத்துவ வஸ்துவே சுவி சேட மதத்துவ கிறிஸ்துவே பரிசுத்தனே கரி சித்தெனை - இரட்சித் தடிமைகொள் நித்தியம் தோத்திரம்! 5. மங்களம் ஈசாவே வளம் மிகும் சங்கையின் ராசாவே - நரர் வாழ்வே மன்னாவே மெய்த்தேவே உமக் கோசன்னாவே! 6. அற்புதப் பரஞ் சோதியே சீனா வெற்பில் ஓங்கிய நிதியே எனக் காக மாதய வாக மானிட னாக மாமரி யாளிடம் வந்த. 7. பக்தர்கள் போற்றும் பரா பரா எனக் குத்தம ஞான தயா பரா பரமே சுரா சருவே சுரா கிருபா கரா சனசே கரா திவ்ய. 8. வேதநாயகன் பாட்டை அன்று விண்ணவ ராடிய ஆட்டைமிக மெச்சி மகிழ்ச்சி சொலச்சுப உச்சித மிச்சமிச்சஞ் செயுமட் செயதேவா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raajaa Enai Aalum Naesaa - 2 1. Maasilaa Mani Aana Muchsudar Maesiyaa Arasae Munuvaelae Maamarai Noolae Thaeva Sengkolae Ingkenin Maelae Anpu Sey 2. Thaavee Tharasan Mainthaa Nin Saranam Saranam Enthaa! Sathaananthaa Vaananthaa Uvanthaal Miga Vandhanam Vandhanam! 3. Aiyaa En Manam Aarri Una Thatimai Endhanai Thaerri Kunamaakki Vinai Neekki Kaithookki Meyp Paakkiyam Kotu 4. Suttha Thirutthuva Vasthuvae Suvi Saeda Mathatthuva Kiristhuvae Parisutthanae Kari Sitthenai - Iratsith Thatimaikol Nitthiyam Thotthiram! 5. Manggalam Eesaavae Valam Mikum Sangkaiyin Raasaavae - Narar Vaazhvae Mannaavae Meytthaevae Umak Kosannaavae! 6. Arpudhap Paranj Sothiyae Seenaa Verpil Ongkiya Nithiyae Enak Kaaga Maadhaya Vaaga Maanida Naaga Maamari Yaalidam Vandha. 7. Paktharkal Porrum Paraa Paraa Enak Kutthama Njaana Thayaa Paraa Paramae Suraa Saruvae Suraa Kirupaa Karaa Sanasae Karaa Thivya. 8. Vaedhanaayakan Paattai Anru Vinnava Raatiya Aattaimiga Mechsi Makizhchsi Solachsuba Uchsidha Micchamicchanj Seyumat Seyathaevaa.