பாடல் #353
ஆசையாகினேன் கோவே
🔤 Aasaiyaakinaen Kovae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசையாகினேன், கோவே - உனக் கனந்த ஸ்தோத்திரம், தேவே! யேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா, ஒரே தட்சகா! - ஆசை 1.வேதா, ஞானப் பர்த்தா, - என் - தாதா நீயே கர்த்தா மா தாரகம் நீ என்றே, பரமானந்தா, சச்சிதானந்தா - ஆசை 2.கானான் நாட்டுக் கரசே, - உயர் - வான் நாட்டார் தொழும் சிரசே, நானாட்ட முடன் தேடித், தேடி நாடிப், பதம் பாடி - ஆசை 3.வீணாய்க் காலம் கழித்தேன்- சற்றும் - தோணாமல் நின்று விழித்தேன் காணா தாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே, எனைத் திருத்தே - ஆசை 4.வந்தனம், வந்தனம், யோவா - நீ சந்ததம் சந்ததம் கா, வா விந்தையாய் உனைப் பணிந்தேன் சத்ய வேதா, யேசுநாதா! - ஆசை 5. ஆதி மானிடர் தேட்டா மகா அற்புதமான கொண்டாட்டா வேதநாயகன் பாட்டுப் படிக்கு விரும்பி மனந் திரும்பி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aasaiyaakinaen, Kovae - Unak Kanandha Sthotthiram, Thaevae! Yaesukiristhu Maasatthuvatthu Ratsakaa, Orae Thatsakaa! - Aasai 1.vaethaa, Njaanap Partthaa, - En - Thaathaa Neeyae Kartthaa Maa Thaarakam Nee Enrae, Paramaananthaa, Sachsithaananthaa - Aasai 2.kaanaan Naattuk Karasae, - Uyar - Vaan Naattaar Thozhum Sirasae, Naanaatta Mudan Thaetith, Thaeti Naatip, Patham Paati - Aasai 3.veenaayk Kaalam Kazhitthaen- Sarrum - Thonaamal Ninru Vizhitthaen Kaanaa Thaattaith Thaetich Sumandha Karutthae, Enaith Thirutthae - Aasai 4.vandhanam, Vandhanam, Yovaa - Nee Sandhatham Sandhatham Kaa, Vaa Vinthaiyaay Unaip Paninthaen Sathya Vaethaa, Yaesunaathaa! - Aasai 5. Aathi Maanidar Thaettaa Makaa Arpudhamaana Kontaattaa Vaedhanaayakan Paattup Patikku Virumpi Manan Thirumpi