பாடல் #204
அரசனைக் காணமலிருபோமோ
🔤 Arasanaik Kaanamalirupomo
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அரசனைக் காணமலிருபோமோ ? நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ? பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ? யூத 1.யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே, ஆக்கமிழ்ந்து மறுவாக்குரைத்த பாலாம் தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! யூத 2.தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! மேற்குத் திசை வழி காட்டிமுன் செல்லுது பார்! பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே அவர் பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! யூத 3.அலங்காரமனை யொன்று தோணுது பார்! அதன் அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்! இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! நாம் எடுத்த கருமம் சித்தியாக்கிடும் பார்! யூத 4.அரமனையில் அவரைக் காணோமே! அதை அகன்று தென்மார்க்கமாய்த் திருப்புவமே! மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, பெத்லேம் வாசலில் நமைக்கொண்டு சேர்க்குது பார்! யூத 5.பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே ராயர் பொற்கழல் அர்ச்சனை புரிவோமே! வன்கண்ணன் ஏரோதைப் பாராமல் தேவ வாக்கினால் திரும்பினோம் சோராமல் யூத
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arasanaik Kaanamalirupomo ? Namathu Aayulai Veenaagak Kazhippomo? Parambarai Njaanatthaip Pazhippomo? Yoodhar Paadanu Pavanggalai Ozhippomo? Yoodha 1.yaakkopilor Velli Uthikkumenrae, Israel Raaja Sengkolengkum Kathikkumenrae, Aakkamizhnthu Maruvaakkuraittha Paalaam Theerkkan Mozhipoyyaadha Paakkiyamae! Yoodha 2.thaeso Mayatthaarakai Thonruthu Paar! Maerkuth Thisai Vazhi Kaattimun Selluthu Paar! Poosanaik Kaana Nankotaigal Kontae Avar Ponnati Vanangkuvom, Natavuminrae! Yoodha 3.alangkaaramanai Yonru Thonuthu Paar! Adhan Azhaku Manamung Kannum Kavarndhathu Paar! Ilavara Sangkirukkum Nicchayam Paar! Naam Etuttha Karumam Sitthiyaakkitum Paar! Yoodha 4.aramanaiyil Avaraik Kaanomae! Athai Aganru Thenmaarkkamaayth Thiruppuvamae! Maraindha Utu Atho! Paar Thirumpinathae, Pethlaem Vaasalil Namaikkontu Saerkkuthu Paar! Yoodha 5.pon Thoobavarkkam Vellaip Polamittae Raayar Porkazhal Arcchanai Purivomae! Vankannan Aerothaip Paaraamal Thaeva Vaakkinaal Thirumpinom Soraamal Yoodha