பாடல் #200
அமலா தயாபரா அருள்கூர் ஐயா
🔤 Amalaa Thayaabaraa Arulkoor Aiyaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அமலா தயாபரா அருள் கூரையா குருபர அமலா தயாபரா அருள் கூரையா. 1.சமையமீரா றோராறு சாஸ்திரங்கள் வேதம் நான்கும் அமையுந் தத்துவந் தொண்ணூற்றாறு மாறுங்கடந்த 2. அந்தமடி நடுவிலாத தற்பரனாதி சுந்தரமிகு மதீத சோதிப்பிரகாச நீதி 3. ஞானத்திரவிய வேத நன்மைப் பரமபோத வானத் தேவப்பிரசாத மகிமைக் களவில்லாத 4. காணப்படா அரூப கருணைச் சுயசொரூப தோணப்படா வியாப சுகிர்தத் திருத் தயாப 5. சத்திய வசன நேயா சமஸ்த புண்ணிய சகாயா கர்த்த தத்துவ உபாயா கருணை பொழியும் வாயா 6. எல்லையில்லா மெஞ்ஞான ஏகபராபர வஸ்தான சொல்லரிதாம் நீதான துல்லிபத்தொன்றா மேலான 7. கருணாகரா உபகாரா தராதரா பரமேசுரா கிருபாகரா சருவேசுரா 8. ஆதியொன்றான மூவா அற்புத வாசே யோவா வேதநாயகன் பாவா மேலாந்திரித்துவ தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Amalaa Thayaabaraa Arul Kooraiyaa Kurubara Amalaa Thayaabaraa Arul Kooraiyaa. 1.samaiyameeraa Roraaru Saasthiranggal Vaedham Naankum Amaiyun Thatthuvan Thonnoorraaru Maarunggatandha 2. Andhamati Natuvilaadha Tharparanaathi Sundharamiku Matheedha Sothippirakaasa Neethi 3. Njaanatthiraviya Vaedha Nanmaip Paramapodha Vaanath Thaevappirasaadha Makimaik Kalavillaadha 4. Kaanappataa Arooba Karunaich Suyasorooba Thonappataa Viyaaba Sukirthath Thiruth Thayaaba 5. Satthiya Vasana Naeyaa Samastha Punniya Sakaayaa Karttha Thatthuva Upaayaa Karunai Pozhiyum Vaayaa 6. Ellaiyillaa Menjnjaana Aegaparaabara Vasthaana Sollarithaam Neethaana Thullibatthonraa Maelaana 7. Karunaagaraa Ubakaaraa Tharaadharaa Paramaesuraa Kirupaagaraa Saruvaesuraa 8. Aathiyonraana Moovaa Arpudha Vaasae Yovaa Vaedhanaayakan Paavaa Maelaanthiritthuva Thaevaa