பாடல் #793
இயேசு நம் பிணிகளை
🔤 Yesu Nam Pinigalai
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 108 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார் நம் நோய்களைச் சுமந்து கொண்டார் - இயேசு நம் பாவங்களுக்காய் காயப்பட்டார் அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார் நம்மை நலமாக்கும் தண்டனை அவர்மேல் விழுந்தது அவருடைய காயங்களால் குணமடைந்தோம் - நாம் கொல்வதற்காய் இழுக்கப்படும் ஆட்டுக்குட்டியைப் போல - மயிர் கத்திரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போல வாய் கூட அவர் திறக்கவில்லை தாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார் நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார் இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார் கழுமரத்தின் மீது தம் உடலில் நம் பாவங்கள் அவர் சுமந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Nam Pinigalai Aerruk Kontaar Nam Noykalaich Sumanthu Kontaar - Yesu Nam Paavanggalukkaay Kaayappattaar Akkiramanggalukkaay Norukkappattaar Nammai Nalamaakkum Thandanai Avarmael Vizhundhathu Avarutaiya Kaayanggalaal Kunamatainthom - Naam Kolvatharkaay Izhukkappatum Aattukkuttiyaip Pola - Mayir Katthirippon Munnilaiyil Katthaadha Semmari Pola Vaay Kooda Avar Thirakkavillai Thaazhmaiyudan Athai Thaangkik Kontaar Nam Paavam Anaitthum Agarri Vittaar Iraivanin Pillaiyaay Maarrivittaar Kazhumaratthin Meethu Tham Udalil Nam Paavanggal Avar Sumanthaar