பாடல் #643
இந்த சூழ்நிலை
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
இந்த சூழ்நிலை எனக்கு மாறும் எந்த சூழ்நிலையும் இன்று மாறும் இயேசு இரத்தத்தால் இயேசு நாமத்தால் எல்லாமே மாறிவிடும் மாராவின் கசப்புகள் மதுரமாய் மாறிவிடும் பானையின் விஷமெல்லாம் அற்புதமாய் நீங்கிவிடும் சிலுவை மரத்தால் மாற்றம் நடக்கும்தோஷம் நீங்கி சந்தோஷம் வரும் கோலியாத்தின் வல்லமை இன்றைக்கே அழிந்திடுமே சாத்தானின் சேனைகள் இப்பொழுதே முறிந்திடுமே சேனைகளின் கர்த்தரால் யுத்தம் நடக்கும் தாவீதுக்கு அளித்த வெற்றிகள் வரும் வெறுமையான கற்சாடி தண்ணீரால் நிரம்பிடுமே வறுமை தரித்திரம் இன்றோடு ஓடிடுமே இயேசுவின் வார்த்தையால் எல்லாம் நடக்கும் வெட்கத்திற்கு பதிலாய் பலன்கள் வரும் அந்தகார இருள்கள் அகன்றே போய்விடுமே ஆச்சரிய ஒளி என்னை வந்தே சேர்ந்திடுமே பரிந்து பேசும் இரத்தத்தால் வாழ்வு கிடைக்கும் பரிசுத்தமாய் என்னை பரலோகம் சேர்க்கும்