பாடல் #1313
உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம்
🔤 Urukaatho Nenjjam Avarthaanae Thanjjam
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாலயத் திரை ரெண்டாய் கிழிந்ததன்றோ தேவன் திருமுகத்தைக் காணாமல் கதிரவன் கண்களை மூடியதோ காரிருள் சூழ்ந்ததோ கல்லறை வெடித்ததோ பூமி அதிர்ந்ததோ புவியெல்லாம் நடுங்கியதோ உத்தமர் இயேசு துடிக்கின்றார் சிலுவையிலே உருகாதோ நெஞ்சம் உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம் உனக்காக பலியாக வந்தார் – கலங்காதோ கண்கள் வழியாதோ கண்ணீர் கல்வாரி காட்சியைக் கண்டு 1. நடமாட முடியா தடுமாறி கிடந்த முடவனின் குரல் கேட்டு நின்று - 2 இடம் தேடி வந்து இதயத்தில் நின்று நடமாட செய்ததாலே உந்தன் கால்களில் ஆணியோ அரசே அதுதான் சிலுவையின் பரிசு -2 2. சிந்தையில் பாவம் குடிகொண்டதாலே சீர்கெட்ட மனிதனை மாற்ற -2 நிந்தனையை சுமந்து கிண்டலாய் மாறி மனிதரை காத்ததாலே உந்தன் சிரசினில் முட்களோ அரசே அதுதான் சிலுவையின் பரிசு -2 3. இதயத்தில் பாவம் குடிகொண்டதாலே இகமதில் அழிகின்ற ஆன்மா -2 பாவத்தை நீக்க ஜீவனை மீட்க இரட்சிப்பின் வழி தந்ததாலே உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே அதுதான் சிலுவையின் பரிசு -2 4. கரமெல்லாம் குஷ்டம் தீராத கஷ்டம் கதறின மனிதனைக் கண்டு - 2 கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி கருணையாய் சுகம் தந்ததாலே உந்தன் கரங்களில் ஆணியோ அரசே அது தான் சிலுவையின் பரிசே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaalayath Thirai Rentaay Kizhindhathanro Devan Thirumugatthaik Kaanaamal Kathiravan Kankalai Mootiyatho Kaarirul Soozhndhatho Kallarai Vetitthatho Poomi Athirndhatho Puviyellaam Natungkiyatho Utthamar Yesu Thutikkinraar Siluvaiyilae Urukaatho Nenjjam Urukaatho Nenjjam Avarthaanae Thanjjam Unakkaaga Paliyaaga Vanthaar – Kalangkaatho Kankal Vazhiyaatho Kanneer Kalvaari Kaatsiyaik Kantu 1. Natamaada Mutiyaa Thatumaari Kidandha Mudavanin Kural Kaettu Ninru - 2 Idam Thaeti Vanthu Idhayatthil Ninru Natamaada Seythathaalae Undhan Kaalkalil Aaniyo Arasae Athuthaan Siluvaiyin Parisu -2 2. Sinthaiyil Paavam Kutikondathaalae Seerketta Manidhanai Maartra -2 Nindhanaiyai Sumanthu Kindalaay Maari Manidharai Kaatthathaalae Undhan Sirasinil Mutkalo Arasae Athuthaan Siluvaiyin Parisu -2 3. Idhayatthil Paavam Kutikondathaalae Igamathil Azhikindra Aanmaa -2 Paavatthai Neekka Jeevanai Meetka Iratsippin Vazhi Thandhathaalae Undhan Idhayatthil Eettiyo Arasae Athuthaan Siluvaiyin Parisu -2 4. Karamellaam Kushtam Theeraadha Kashtam Katharina Manidhanaik Kantu - 2 Kanivotu Nokki Karam Thottu Thookki Karunaiyaay Sugam Thandhathaalae Undhan Karanggalil Aaniyo Arasae Athu Thaan Siluvaiyin Parisae - 2