பாடல் #624
இது விதைக்கின்ற காலமல்லவா
🔤 Ithu Vithaikkindra Kaalamallavaa
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இது விதைக்கின்ற காலமல்லவா நாம் செயலாற்றும் நேரமல்லவா உறங்காமல் நாமும் விரைந்தோடி இங்கும் சுவிசேஷ விதை தூவுவோம் 1. ராக்காலம் வருகின்றதே – அதன் சாயல் தெரிகின்றதே ஒளியுள்ள காலம் முடிவாகுமுன்னே உன் சேவை நிறைவேற்றிடு 2. திறப்பின் ஓர் வாசல் எங்கே அதில் நிற்கும் மனிதன் எங்கே கர்த்தரின் கண்கள் பூலோகமெங்கும் அதை தேடி அலைகின்றதே 3. பின் மாரி பொழிகின்றதே உன் வேலை வருகின்றதே அழிகின்ற கூட்டம் உன்னைத்தான் இன்று எதிர் நோக்கி நிற்கின்றதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithu Vithaikkindra Kaalamallavaa Naam Seyalaarrum Naeramallavaa Urangkaamal Naamum Virainthoti Ingkum Suvisaesha Vithai Thoovuvom 1. Raakkaalam Varukindrathae – Adhan Saayal Therikindrathae Oliyulla Kaalam Mutivaakumunnae Un Saevai Niraivaerritu 2. Thirappin Or Vaasal Engkae Athil Nirkum Manidhan Engkae Karttharin Kankal Poologamengkum Athai Thaeti Alaikindrathae 3. Pin Maari Pozhikindrathae Un Vaelai Varukindrathae Azhikindra Koottam Unnaitthaan Inru Ethir Nokki Nirkindrathae