பாடல் #6033
யாக்கோபே நீ வேரூன்றுவாய்
🔤 Yaakkopae Nee Vaeroonruvaay
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: Bb Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 135 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாக்கோபே நீ வேரூன்றுவாய் - 2
பூத்து குலங்கிடுவாய்
காய்த்து கனி தருவாய்
பூமியெல்லாம் நிரப்பிடுவாய் இந்த
ஏன் மகனே(ளே) நீ வேரூன்றுவாய்
நானே காப்பாற்றுவேன்
நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
இரவும் பகலும் காத்துக் கொள்வேன் - உன்னை
எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்
அருமையான மகன் அல்லவோ
பிரியமான பிள்ளையல்லவோ - நீ
உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
உனக்காக என் இதயம் ஏங்குகின்றது
நுகங்களை முறித்துவிட்டேன்
கட்டுகளை அறுத்துவிட்டேன்
இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
எனக்கே ஊழியம் செய்திடுவாய்
புதிய கூர்மையான
போரடிக்கும் கருவியாக்குவேன்
மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்
மேடுகளை பிளந்து
ஆறுகள் தோன்ற செய்வேன்
பள்ளத்தாக்கின் நடுவினிலே
ஊற்றுகள் புறப்பட்டு ஓடச் செய்வேன்
நானே உங்கள் தேவன்
நீங்கள் என் பிள்ளைகள்
பாழான மண்மேடு கட்டப்படும்
பாடலும் ஆடலும் மீண்டும் கேட்கும்
உன்னோடு நான் இருந்து
உனக்காக வழக்காடுவேன்
அச்சுறுத்துவோர் எவருமின்றி
அமைதியிலே நீ இளைப்பாறுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaakkopae Nee Vaeroonruvaay - 2
Pootthu Kulangkituvaay
Kaaytthu Kani Tharuvaay
Poomiyellaam Nirappituvaay Indha
Aen Makanae(lae) Nee Vaeroonruvaay
Naanae Kaappaarruvaen
Naalthorum Neer Paaychsuvaen
Iravum Pakalum Kaatthuk Kolvaen - Unnai
Evarum Theengkizhaikka Vidamaattaen
Arumaiyaana Makan Allavo
Piriyamaana Pillaiyallavo - Nee
Unnai Naan Innum Ninaikkinraen
Unakkaaga En Idhayam Aengkukindrathu
Nuganggalai Muritthuvittaen
Kattugalai Arutthuvittaen
Inimael Nee Atimai Aavathillai
Enakkae Oozhiyam Seythituvaay
Puthiya Koormaiyaana
Poratikkum Karuviyaakkuvaen
Malaigalai Mithitthu Norukkituvaay
Kunrugalai Thavitu Potiyaakkuvaay
Maetugalai Pilanthu
Aarugal Thondra Seyvaen
Pallatthaakkin Natuvinilae
Oorrugal Purappattu Odach Seyvaen
Naanae Unggal Devan
Neenggal En Pillaigal
Paazhaana Manmaetu Kattappatum
Paadalum Aadalum Meentum Kaetkum
Unnotu Naan Irunthu
Unakkaaga Vazhakkaatuvaen
Achsurutthuvor Evaruminri
Amaithiyilae Nee Ilaippaaruvaay
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bb Eb Bb
Eb
F Bb
F Bb
Bb Eb Bb
F Bb Eb
F Bb
Eb
C7 F Bb
F Bb Eb
F Bb
Eb
C7 F Bb
F Bb Eb
F Bb
Eb
C7 F Bb
F Bb Eb
F Bb
Eb
C7 F Bb
F Bb Eb
F Bb
Eb
C7 F Bb
F Bb Eb
F Bb
Eb
C7 F Bb
F Bb Eb
F Bb
F Bb
C7 F Bb