பாடல் #5259
சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Scale: G Minor
Beat: 6/8
🎸 Chords Available
சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள் ஜனங்களே எல்லோரும் அவரைப் போற்றுங்கள் - (2) அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது - (2) அவரது இரக்கம் என்றும் உள்ளது நம் தேவன் உயர்ந்த செல்வந்தரன்றோ தேவையான அனைத்தையும் மிகுதியாய்த் தருவார் - (2) அனேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார் கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார் கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம் முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் - (2) ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாது என்றார் ஒருநாளும் அழிந்து போக விடமாட்டார் நமது கர்த்தரோ உறைவிடமானார் இன்னல்கள் நடுவிலே மறைவிடமானார் - (2) விடுதலை கீதங்கள் பாட வைக்கிறார் வெற்றிக் கொடி அசைத்து ஆட வைக்கின்றார் சொந்த மகன் என்றும் பார்க்காமலே நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே - (2) அவரோடு கூட மற்ற எல்லா நன்மைகளும் அருள்வார் என்பது நிச்சயம் தானே தேவனாம் கர்த்தருக்கு ஊழியம் செய்தால் உணவையும் தண்ணீரையும் மிகுதியாய்த் தந்திடுவார் - (2) எல்லா நோய்களையும் அகற்றிடுவார் குழந்தைப் பாக்கியமும் கொடுத்திடுவார்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Eb D
Bb D7 Gm
Eb Cm Bb
Eb Cm Bb
Bb D
Gm Eb Gm
Eb Cm Bb
Eb Cm Bb
Bb D
Gm Eb Gm
Eb Cm Bb
Eb Cm Bb
Bb D
Gm Eb Gm
Eb Cm Bb
Eb Cm Bb
Bb D
Gm Eb Gm
Eb Cm Bb
Eb Cm Bb
Bb D
Gm Eb Gm
Eb Cm Bb
Eb Cm Bb