பாடல் #41892
குளிர்ந்த ஏலிம் காற்றே
🔤 Kulirndha Aelim Kaarrae
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
🎼 Scale: Bm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குளிர்ந்த ஏலிம் காற்றே அள்ள குறையாத ஊற்றே வறண்ட நிலத்தில் ஆறாய் வந்தீரே இயேசுவே என் வறட்சி எல்லாம் செழிப்பாய் மாற்றவே மணலின்மேல் வீடுகட்டி பெருமழை வந்தநேரம் செய்வது அறியாது நிலைகுலைந்து போனபோது வந்தீரே புண்ணியரே வாழ்வளித்த வள்ளலே இழந்ததை திரும்ப தந்தீரே இரட்டிப்பாக இரட்சிப்பை நானும் கண்டேனே - உம்மிடத்தில் வசனமாம் விதையை தூவி விளைச்சலின் பலனை நோக்கி இராப்பகல் உறக்கமின்றி எதிர்பார்த்து கலக்கும்போது வந்தீரே மகிமையாக தூயதேவ ஆவியே கண்ணீரை களிப்பாய் மாற்றினீர் எந்தனின் களஞ்சியங்கள் நிரம்ப செய்தீரே கோதுமையால் மங்கிய திரியை போல நெரிந்த நாணல்போல வலிமை இல்லாமல் பலனற்று சோர்ந்த போது வந்தீரே ரபுனியே மீட்டெடுத்த முதல்வரே அரணுக்கு திரும்ப செய்தீரே அன்பினால் அரியணையில் அமர செய்தீரே- மீண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kulirndha Aelim Kaarrae Alla Kuraiyaadha Oorrae Varanda Nilatthil Aaraay Vantheerae Yesuvae En Varatsi Ellaam Sezhippaay Maartravae Manalinmael Veetugatti Perumazhai Vandhanaeram Seyvathu Ariyaathu Nilaikulainthu Ponapothu Vantheerae Punniyarae Vaazhvalittha Vallalae Izhandhathai Thirumba Thantheerae Irattippaaga Iratsippai Naanum Kantaenae - Ummidatthil Vasanamaam Vithaiyai Thoovi Vilaicchalin Palanai Nokki Iraappakal Urakkaminri Ethirpaartthu Kalakkumpothu Vantheerae Makimaiyaaga Thooyathaeva Aaviyae Kanneerai Kalippaay Maarrineer Endhanin Kalanjsiyanggal Niramba Seytheerae Kothumaiyaal Mangkiya Thiriyai Pola Nerindha Naanalpola Valimai Illaamal Palanarru Sorndha Pothu Vantheerae Rapuniyae Meettetuttha Mudhalvarae Aranukku Thirumba Seytheerae Anpinaal Ariyanaiyil Amara Seytheerae- Meentum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm
Bm Em
Bm B Bm
Bm
B Bm
Dm
A Dm
B Bm