பாடல் #8634
இயேசு இருப்பிடம்
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
Scale: Bm
Beat: Country Waltz
இயேசு இருப்பிடம் மகிழ்ச்சி சமூகமே மகிமை சமூகமே இயேசு இருப்பிடம் 1.அங்கும் இங்கும் அலைந்தேன் எங்கும் நிம்மதி இல்லை தங்கத் தந்தை இயேசு என்னை மீட்டு எடுத்தார்- இயேசு 2.சற்று திகைத்த என்னை பற்றிப் பிடித்து எடுத்தார் வெற்றி நிலையில் இயேசு தூக்கி எடுத்து மகிழ்ந்தார்- இயேசு 3.இயேசு எந்தன் தகப்பன் வல்ல உரிமை பெற்றேன் மரணக் கண்ணி தெறிக்க ஜீவன் தந்து வளர்த்தார்- இயேசு 4.ஆசீர் கரம் நீட்டி அன்பு வாழ்வு தந்தார் வான விருந்தை அருந்த விண்ணில் பறந்து செல்வேன்- இயேசு