பாடல் #3693
யாரை நான் அனுப்புவேன்
🔤 Yaarai Naan Anuppuvaen
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாரை நான் அனுப்புவேன் யார் போவார் என் காரியமாய் என்ற உம் குரல் கேட்குதய்யா போகிறேன் உம் காரியமாய் நான் கண்கள் இருந்தும் குருடர்களாய் காதுகள் இருந்தும் செவிடர்களாய் உள்ளம் இருந்தும் ஊமைகளாய் வாழ்கின்ற ஜனத்தை மீட்டிடவே பணம் இருந்தும் பாமரராய் பட்டம் இருந்தும் மூடர்களாய் இரட்சகர் இருந்தும் பாவிகளாய் வாழ்கினற ஜனத்தை மீட்டிடவே காணாமல் போன ஆடுகளாய் தொலைந்து போன பாவிகளாய் தகப்பனைப் பிரிந்த பிள்ளைகளாய் தவிக்கின்ற ஜனத்தை மீட்டிடவே பரிகாரி இருந்தும் நோய்களுடன் சிலுவை இருந்தும் சாபத்துடன் கல்வாரி இருந்தும் கறைகளுடன் வாழ்கின்ற ஜனத்தை மீட்டிடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaarai Naan Anuppuvaen Yaar Povaar En Kaariyamaay Endra Um Kural Kaetkudhayyaa Pokiraen Um Kaariyamaay Naan Kankal Irunthum Kurudarkalaay Kaathugal Irunthum Sevidarkalaay Ullam Irunthum Oomaigalaay Vaazhkindra Janatthai Meettidavae Panam Irunthum Paamararaay Pattam Irunthum Moodarkalaay Iratsakar Irunthum Paavigalaay Vaazhkinara Janatthai Meettidavae Kaanaamal Pona Aatugalaay Tholainthu Pona Paavigalaay Thakappanaip Pirindha Pillaigalaay Thavikkindra Janatthai Meettidavae Parikaari Irunthum Noykaludan Siluvai Irunthum Saabatthudan Kalvaari Irunthum Karaigaludan Vaazhkindra Janatthai Meettidavae