பாடல் #28133
இயேசைய்யா உம் நாமம்
🔤 Yesaiyyaa Um Naamam
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: B Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 105 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன் இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன் உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா செய்யும் செயலெல்லாம் என்றும் வல்லச் செயலைய்யா உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா எந்தன் உயிரெல்லாம் என்றும் நீரே ஐயா நீரே ஐயா எகிப்திலே புது விதத்திலே உம் பலத்தை வெளியிட்டீர் மிரட்டும் அலைகளை விரட்டும் படைகளை விலக்கி வழிவிட்டீர் பரத்திலே நீர் அனைத்தையும் உம் புயத்தில் ஆள்கின்றீர் ஜகத்தையும் என் அகத்தையும் நீர் அடக்கி ஆள்கின்றீர் இரக்கமும் மனதுருக்கமும் உம் சிறப்பு குணமய்யா கொடுப்பதும் உயிர் எடுப்பதும் உம் விருப்ப குணமய்யா மரத்திலே நீர் மரித்தது என் வாழ்க்கை கரையேற மரித்தபின்னே உயிர்த்ததுந்தன் வார்த்தை நிறைவேற
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesaiyyaa Um Naamam Arinthaen Yesaiyyaa Um Paadham Paninthaen Undhan Sollellaam Enrum Unmaich Sollaiyyaa Seyyum Seyalellaam Enrum Vallach Seyalaiyyaa Undhan Sollellaam Enrum Unmaich Sollaiyyaa Endhan Uyirellaam Enrum Neerae Aiyaa Neerae Aiyaa Ekipthilae Puthu Vidhatthilae Um Palatthai Veliyitteer Mirattum Alaigalai Virattum Pataigalai Vilakki Vazhivitteer Paratthilae Neer Anaitthaiyum Um Puyatthil Aalkinreer Jakatthaiyum En Agatthaiyum Neer Adakki Aalkinreer Irakkamum Manathurukkamum Um Sirappu Kunamayyaa Kotuppathum Uyir Etuppathum Um Viruppa Kunamayyaa Maratthilae Neer Maritthathu En Vaazhkkai Karaiyaera Maritthapinnae Uyirtthathundhan Vaartthai Niraivaera