பாடல் #236
அறுவடை மிகுதி
🔤 Aruvatai Mikuthi
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அறுவடை மிகுதி ஆளோ இல்லை அன்பரின் கதறல் கேட்டிடுதே நானிலம் முழுவதும் நாநூறு கோடி நாசத்தின் வழியை நாடிடுதே இயேசுவின் அன்பு நம்மையும் நெருக்க எழும்பிடுவோம் நாம் வாலிபரே அமைதி இல்லை நம்பிக்கை இல்லை அழுகையும் கண்ணீர் வாழ்க்கையிலே உறக்கமும் முழு உணவில்லை உணர்ந்திடுவீர் இதை வாலிபரே மிருகம் போல் உழைத்தும் வறுமையின் தொல்லை வாதையில் வாட்டிடும் கூட்டத்தைப்பார் ஆற்றுவாரில்லை தேற்றுவாரில்லை அன்பினை காட்டவும் யாருமில்லை நம்பிக்கையற்ற கல்லறை நாடி நாளினில் இலட்சியங்கள் செல்கிறதே திறப்பினில் நிற்க ஆளில்லை என்று திகைத்துக் கதறிடும் இயேசுடிவப் பார் அலறிடும் பிள்ளைகளின் குரலினைக் கேட்டும் அழுவதின்றி வேறென்ன செய்வார் யாரை அனுப்புவேன் யார் போவான் என்றார் கதறலை என் உள்ளம் கேட்டிடாதோ அன்பரே வந்தேன் அழுகையைக் கண்டேன் அர்ப்பணித்தேன் எந்தன் வாழ்க்கையிலே பாரினில் கழுதையாய் சுமந்தும்மை சென்று பாதத்தில் விடுவேன் ஜீவனையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aruvatai Mikuthi Aalo Illai Anbarin Katharal Kaettituthae Naanilam Muzhuvathum Naanooru Koti Naasatthin Vazhiyai Naatituthae Yesuvin Anpu Nammaiyum Nerukka Ezhumpituvom Naam Vaalibarae Amaithi Illai Nampikkai Illai Azhukaiyum Kanneer Vaazhkkaiyilae Urakkamum Muzhu Unavillai Unarnthituveer Ithai Vaalibarae Mirugam Pol Uzhaitthum Varumaiyin Thollai Vaathaiyil Vaattitum Koottatthaippaar Aarruvaarillai Thaerruvaarillai Anpinai Kaattavum Yaarumillai Nampikkaiyartra Kallarai Naati Naalinil Ilatsiyanggal Selkirathae Thirappinil Nirka Aalillai Enru Thikaitthuk Katharitum Yesutivap Paar Alaritum Pillaigalin Kuralinaik Kaettum Azhuvathinri Vaerenna Seyvaar Yaarai Anuppuvaen Yaar Povaan Enraar Katharalai En Ullam Kaettitaatho Anbarae Vanthaen Azhukaiyaik Kantaen Arppanitthaen Endhan Vaazhkkaiyilae Paarinil Kazhuthaiyaay Sumanthummai Senru Paadhatthil Vituvaen Jeevanaiyae