பாடல் #479
ஆயிரம் பேரில் சிறந்தவர் – என் இயேசு ராஜன்
🔤 Aayiram Paeril Sirandhavar – En Yesu Raajan
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயிரம் பேரில் சிறந்தவர் – என் இயேசு ராஜன் அழகில் முற்றும் சிறந்தவர் – இவர் எந்தன் நேசர் என்னோடு என்றும் வாழ்பவர் என் நேசர் என் நண்பர் எந்நாளும் எனைக்காப்பார் தோளின் மேல் சுமந்திடுவார் 1. கண் துயிலும் நேரம் எனைத்தேடி ஓடி வந்தாரே கைவிரலை கதவில் விட்டாரே உன் நேசம் இன்பம் அது மதுரம் என்று சொன்னாரே என் பிரியம் என்றுரைத்தாரே வெள்ளைப் போளம் வாசம் வீசிடவே தூபஸ்தம்பம் போல வருகிறார் உள்ளம் துள்ளிப்பாடும் மகிழ்ந்தாடும் என்னில் எப்போதும் 2. கன்மலையின் ஓரம் தங்கும் புறாவே என் உத்தமியே கண்களால் என்னை வென்றாயே துதி மலர் தொடுப்பேன் மாலையிடுவேன் என் மன்னனுக்கே புதுப்பாடல் பாடிடுவேனே கோடியுகம் கூட வாழ்ந்திடுவேன் பாடிப்பாடி மனம் மகிழ்வேன் என் தாகம் நீரே உம்மைப்பாட வரம் தந்தருளும் 3. கர்த்தர் அன்பை பாட புகழ் சூட நாவு போதாதே ஈடு இணை ஏதும் இல்லையே மாந்தர் மனம் மகிழ துயர் அகல துணை வந்தாரே தரணியில் காத்திடுவாரே ஆவியினால் களி கூர்ந்திடுவேன் நீதியினால் என்றும் வாழ்ந்திடுவேன் என் நேசர் வருவார் என்னை அணைப்பார் நான் என்ன சொல்வேன்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayiram Paeril Sirandhavar – En Yesu Raajan Azhakil Murrum Sirandhavar – Ivar Endhan Naesar Ennotu Enrum Vaazhpavar En Naesar En Nanpar Ennaalum Enaikkaappaar Tholin Mael Sumanthituvaar 1. Kan Thuyilum Naeram Enaitthaeti Oti Vanthaarae Kaiviralai Kathavil Vittaarae Un Naesam Inbam Athu Mathuram Enru Sonnaarae En Piriyam Enruraitthaarae Vellaip Polam Vaasam Veesidavae Thoobasthambam Pola Varukiraar Ullam Thullippaatum Makizhnthaatum Ennil Eppothum 2. Kanmalaiyin Oram Thangkum Puraavae En Utthamiyae Kankalaal Ennai Venraayae Thuthi Malar Thotuppaen Maalaiyituvaen En Mannanukkae Puthuppaadal Paatituvaenae Kotiyugam Kooda Vaazhnthituvaen Paatippaati Manam Makizhvaen En Thaagam Neerae Ummaippaada Varam Thandharulum 3. Kartthar Anpai Paada Pugazh Sooda Naavu Pothaathae Eetu Inai Aethum Illaiyae Maandhar Manam Makizha Thuyar Agala Thunai Vanthaarae Tharaniyil Kaatthituvaarae Aaviyinaal Kali Koornthituvaen Neethiyinaal Enrum Vaazhnthituvaen En Naesar Varuvaar Ennai Anaippaar Naan Enna Solvaen!