பாடல் #8576
தொனி தெய்வீக தொனியே
🔤 Thoni Theyveega Thoniyae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: C
🥁 Beat: Gypsy Rumba
⏱️ Tempo: 110 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தொனி! தெய்வீக தொனியே! தெள்ளமுத தொனியே! இயேசுவின் தொனிதான்! நித்தமும் தொனித்திடுதே! அவர் சித்தம் செய்திடவே! 1.ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே அரவணைத்திடும் அன்பர் - ஆறுதல் குரலே கர்த்தரின் நாமம் மகிமையானதே நம்பிடுவோர்க்கு என்றும் - வல்லமை குரலே - தொனி 2.விழிப்புணர்ச்சி விசுவாச வீரத்தை விந்தையாய் மாற்றிடும் - விண்ணப்பக் குரலே ஜெயத்தின் வழியில் சீயோனில் சேர்க்க சத்தியம் கூறிட - கூப்பிடும் குரலே- தொனி 3.தாயின் மடியில் தவழும் பிள்ளைப் போல் போற்றி வளர்த்திடும் - அன்பின் குரலே மகத்துவ மகிமையில் மாண்புடன் திகழ பாவத்திலிருந்தென்னை - மீட்டிடும் குரலே- தொனி 4.செழித்த இடத்தில் ஆத்துமா கொழுக்க மந்தையில் சேர்த்திடும் - மேய்ப்பனின் குரலே கெம்பீர நடையுடன் தலைகளை உயர்த்திட உரிமை கொடுத்திடும் - இராஜாவின் குரலே - தொனி 5.தாகமுடையவர் ஜீவ தண்ணீரையே பெற்றுக் கொள் என்றிடும் - மணவாளன் குரலே மணவாட்டி சபையை மறுரூபப்படுத்திடும் மணவாளனுடன் வரும் - எக்காள தொனியே- தொனி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thoni! Theyveega Thoniyae! Thellamudha Thoniyae! Yesuvin Thonithaan! Nitthamum Thonitthituthae! Avar Sittham Seythidavae! 1.aayiramaayiram Aantugalaagavae Aravanaitthitum Anbar - Aarudhal Kuralae Karttharin Naamam Makimaiyaanathae Nampituvorkku Enrum - Vallamai Kuralae - Thoni 2.vizhippunarchsi Visuvaasa Veeratthai Vinthaiyaay Maarritum - Vinnappak Kuralae Jeyatthin Vazhiyil Seeyonil Saerkka Satthiyam Koorida - Kooppitum Kuralae- Thoni 3.thaayin Matiyil Thavazhum Pillaip Pol Porri Valartthitum - Anpin Kuralae Makatthuva Makimaiyil Maanpudan Thigazha Paavatthilirunthennai - Meettitum Kuralae- Thoni 4.sezhittha Idatthil Aatthumaa Kozhukka Manthaiyil Saertthitum - Maeyppanin Kuralae Kempeera Nataiyudan Thalaigalai Uyartthida Urimai Kotutthitum - Iraajaavin Kuralae - Thoni 5.thaagamutaiyavar Jeeva Thanneeraiyae Perruk Kol Enritum - Manavaalan Kuralae Manavaatti Sapaiyai Maruroobappatutthitum Manavaalanudan Varum - Ekkaala Thoniyae- Thoni