பாடல் #8553
இன்ப கிறிஸ்தேசுவே
🔤 Inba Kiristhaesuvae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: C
🥁 Beat: Pop Waltz
⏱️ Tempo: 150 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்ப கிறிஸ்தேசுவே! எங்களை இரட்சிக்க அவதரித்த இன்ப கிறிஸ்தேசுவே பாலஸ்தீன் பூமியில் பிறந்தீரே பரவசக் காட்சி அளித்தீரே பனிக்கட்டிக் காலத்தின் குளிரெல்லாம் பயமின்றி சகித்தீரே 1.மாசற்ற ஜோதி நீரே மகிமையாய் மாநிலத்தில் உதித்தீரே மாசற்ற ஜோதி நீரே மாணிக்கக் கல்லைப் போல் வந்திருக்க மங்களம் சொல்லி வாழ்த்துகிறோம் மணவாட்டி மேன்மை திருச்சபையை மகிமையில் நிறுத்திடவே 2.மாட்டுக் கொட்டிலில் கண்டோம் மூன்று சாஸ்திரிகள் வாழ்த்துதல் கூறிட மாட்டுக் கொட்டிலில் கண்டோம் மகிமையின் ரூபமாய் பிரகாசிக்க மங்களம் சொல்லி வாழ்த்துகிறோம் மாட்சிமை கண்டிடும் இயேசுவின் வருகை மனதில் நின்றிடவே 3.மணவாளன் மகிமை கண்டோம் மணவாட்டி மகிழ்ச்சியின் பரவசம் பொங்கிட மணவாளன் மகிமை கண்டோம் மாறாத மனம் என்றும் நிறைந்து நிற்க மங்களம் சொல்லி வாழ்த்துகிறோம் சீருடை தரித்து சீயோனிலே சிறந்து விளங்கிடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inba Kiristhaesuvae! Enggalai Iratsikka Avatharittha Inba Kiristhaesuvae Paalastheen Poomiyil Pirantheerae Paravasak Kaatsi Alittheerae Panikkattik Kaalatthin Kulirellaam Payaminri Sakittheerae 1.maasartra Jothi Neerae Makimaiyaay Maanilatthil Uthittheerae Maasartra Jothi Neerae Maanikkak Kallaip Pol Vanthirukka Manggalam Solli Vaazhtthukirom Manavaatti Maenmai Thirucchapaiyai Makimaiyil Nirutthidavae 2.maattuk Kottilil Kantom Moonru Saasthirigal Vaazhtthudhal Koorida Maattuk Kottilil Kantom Makimaiyin Roobamaay Pirakaasikka Manggalam Solli Vaazhtthukirom Maatsimai Kantitum Yesuvin Varukai Manathil Ninridavae 3.manavaalan Makimai Kantom Manavaatti Makizhchsiyin Paravasam Pongkida Manavaalan Makimai Kantom Maaraadha Manam Enrum Nirainthu Nirka Manggalam Solli Vaazhtthukirom Seerutai Tharitthu Seeyonilae Siranthu Vilangkidavae