பாடல் #2085
கவலை கொள்ளாதிருங்கள்
🔤 Kavalai Kollaathirunggal
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கவலை கொள்ளாதிருங்கள் - 2 உயிர் வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம் - என்று கவலை கொள்ளாதிருங்கள் பறக்கும் பறவைகள் பாருங்கள் விதைப்பதில்லை அறுப்பதில்லை பரம பிதா ஊட்டுகிறார் மறப்பாரோ மகனே(ளே) உன்னை (உயிர் வாழ...) கவலைப் படுவதினால் நமது உயரத்திலே ஒரு முழம் கூட்ட முடியுமா புது பெலன் பெறவும் கூடுமா நாளைய தினம் குறித்து நம்பிக்கை இழக்காதே நாளைக்கு வழி பிறக்கும் - நீ இன்றைக்கு நன்றி சொல்லு தகப்பனின் விருப்பத்தையும் அவரது ஆட்சியையும் தேடுவோம் முதலாவது - நம் தேவைகளை சந்திப்பார் காட்டு மலர்கள் கவனியுங்கள் உழைப்பதில்லை நூற்பதில்லை உடுத்துகிறார் நம் தகப்பன் உனக்கு அவர் அதிகம் செய்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kavalai Kollaathirunggal - 2 Uyir Vaazha Ethai Unpom Udal Mooda Ethai Utuppom - Enru Kavalai Kollaathirunggal Parakkum Paravaigal Paarunggal Vithaippathillai Aruppathillai Parama Pithaa Oottukiraar Marappaaro Makanae(lae) Unnai (uyir Vaazha...) Kavalaip Patuvathinaal Namathu Uyaratthilae Oru Muzham Kootta Mutiyumaa Puthu Pelan Peravum Kootumaa Naalaiya Thinam Kuritthu Nampikkai Izhakkaathae Naalaikku Vazhi Pirakkum - Nee Inraikku Nanri Sollu Thakappanin Viruppatthaiyum Avarathu Aatsiyaiyum Thaetuvom Mudhalaavathu - Nam Thaevaigalai Santhippaar Kaattu Malarkal Kavaniyunggal Uzhaippathillai Noorpathillai Ututthukiraar Nam Thakappan Unakku Avar Athigam Seyvaar