பாடல் #1327
உலகம் வேண்டாம் செல்வம் வேண்டாம்
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
Scale: E Maj
Beat: Waltz
உலகம் வேண்டாம் செல்வம் வேண்டாம் உன்னத(ர்) சீயோன் (இயேசு) போதும் போதும் அல்லேலூயா(3) தேவனுக்கே அல்லேலூயா(3) ராஜானுக்கே 1. அழிந்து போகும் ஆஸ்தி வேண்டாம் ஆகாத அறிவும் வேண்டாம் ஆஸ்தி வேண்டாம் அறிவும் வேண்டாம் அன்புள்ள இயேசு போதும் போதும் 2. பாழாக்கும் பாவம் வேண்டாம் பாழ்கடிக்கும் பொய்யும் வேண்டாம் பாவம் வேண்டாம் பொய்யும் வேண்டாம் பரிசுத்த இயேசு போதும் போதும் 3. சோதோமின் இன்பம் வேண்டாம் எகிப்தின் மேன்மை வேண்டாம் இன்பம் வேண்டாம் மேன்மை வேண்டாம் என் இயேசு ராஜா போதும் போதும் 4. ஜீவனத்தின் பெருமை வேண்டாம் சீரழிக்கும் சினிமா வேண்டாம் பெருமை வேண்டாம் சினிமா வேண்டாம் பரலோக ராஜா போதும் போதும் 5. கண்களின் இச்சை வேண்டாம் மாம்சத்தின் இச்சை வேண்டாம் வேண்டாம் வேண்டாம் இச்சை வேண்டாம் இனிமையான இயேசு போதும் போதும் 6. அழியவைக்கும் ஆசை வேண்டாம் ஆராதிக்க சிலையும் வேண்டாம் ஆசை வேண்டாம் சிலையும் வேண்டாம் ஆவியான இயேசு போதும் போதும்