பாடல் #1231
உம்மை நாடி
🔤 Ummai Naati
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 110 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நாடித் தேடும் மனிதர் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும் உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர் மன அமைதி இன்று பெறட்டும் மகிமை, மாட்சிமை மாவேந்தன் உமக்கே துதியும் கனமும், தூயோனே உமக்கே ஒரு நாளும் உம்மை மறவேன் ஒரு போதும் உம்மை பிரியேன் மறு வாழ்வு தந்த நேசர் மணவாளன் மடியில் சாய்ந்தேன் (மகிமை... என் பார்வை சிந்தை எல்லாம் நீர்காட்டும் பாதையில் தான் என் சொல்லும் செயலும் எல்லாம் உம் சித்தம் செய்வதில் தான் (மகிமை... உந்தன் வேதம் எனது உணவு நன்றி கீதம் இரவின் கனவு உந்தன் பாதம் போதும் எனக்கு அதுதானே அணையா விளக்கு (மகிமை... உம்மை வருத்தும் வழியில் நடந்தால் என்னைத் திருத்த வேண்டும் தேவா கருத்தோடு உமது வசனம் கற்றுத் தந்து நடத்த வேண்டும் (மகிமை...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Naatith Thaetum Manidhar Ummil Makizhnthu Kalikoorattum Undhan Meetpil Naattam Kolvor Mana Amaithi Inru Perattum Makimai, Maatsimai Maavaendhan Umakkae Thuthiyum Kanamum, Thooyonae Umakkae Oru Naalum Ummai Maravaen Oru Pothum Ummai Piriyaen Maru Vaazhvu Thandha Naesar Manavaalan Matiyil Saaynthaen (makimai... En Paarvai Sinthai Ellaam Neerkaattum Paathaiyil Thaan En Sollum Seyalum Ellaam Um Sittham Seyvathil Thaan (makimai... Undhan Vaedham Enathu Unavu Nanri Keedham Iravin Kanavu Undhan Paadham Pothum Enakku Athuthaanae Anaiyaa Vilakku (makimai... Ummai Varutthum Vazhiyil Natanthaal Ennaith Thiruttha Vaentum Thaevaa Karutthotu Umathu Vasanam Karruth Thanthu Natattha Vaentum (makimai...