பாடல் #1167
உம் சித்தம் செய்வதில்தான்
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Scale: F Maj
Beat: 2/4
உம் சித்தம் செய்வதில்தான் - (நான்) மகிழ்ச்சி அடைகின்றேன் உம் வசனம் இதயத்திலே, தினம் தியானமாய்க் கொண்டுள்ளேன் அல்லேலூயா (2) மகிமை உமக்குத்தான் அல்லேலூயா (2) மாட்சிமை உமக்குத்தான் காத்திருந்தேன் பொறுமையுடன், கேட்டீரே என் வேண்டுதலை குழியில் இருந்து தூக்கி - (கன்) மலையில் நிறுத்தினீரே - அல்லேலூயா துதிக்கும் புதியபாடல், (என்) நாவில் எழச்செய்தீரே - உம்மைத் வலரும் இதைப் பார்த்துப் பார்த்து, நம்புவார்கள் உம்மைமே எத்தனை எத்தனை நன்மைகளோ, என் வாழ்வில் நீர் செய்தீர் எண்ண இயலாதையா, விவரிக்க முடியாதையா மாபெரும் சரப நடுவில், உம் புகழை நான் அறிவிப்பேன் மௌனமாய் இருக்கமாட்டேன் மனக்கண்கள் திறந்தீரே