பாடல் #103
அன்பரின் நேசம்
🔤 Anbarin Naesam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: E
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 90 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? - அதிசய அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம். - அதிசய 1. இதுவென் சரீரம், இதுவென்றன் ரத்தம், எனை நினைந்திடும்படி அருந்துமென்றாரே. 2. பிரிந்திடும் வேளை நெருங்கின தாலே வருந்தின சீடர்க்காய் மறுகி நின்றாரே. 3. வியாழனிரவினில் வியாகுலத்தோடே விளம்பின போதகம் மறந்திடலாமோ? 4. செடியும் கொடியும்போல் சேர்ந்து தம்மோடே முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே. 5. பக்தர்கட்காகப் பரமனை நோக்கி மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக்கொண்டாரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anbarin Naesam Aar Sollalaakum? - Athisaya Anbarin Naesam Aar Sollalaakum? Thunba Akoram Thodarnthitum Naeram. - Athisaya 1. Ithuven Sareeram, Ithuvendran Rattham, Enai Ninainthitumbati Arunthumenraarae. 2. Pirinthitum Vaelai Nerungkina Thaalae Varunthina Seedarkkaay Maruki Ninraarae. 3. Viyaazhaniravinil Viyaakulatthotae Vilampina Podhakam Maranthidalaamo? 4. Setiyum Kotiyumpol Saernthu Thammotae Mutivu Pariyandham Nilaippeerenraarae. 5. Paktharkatkaagap Paramanai Nokki Metthavum Ookkamaay Vaentikkontaarae.